என் மலர்tooltip icon
    < Back
    முதல் பக்கம் திரைவிமர்சனம் | Muthal Pakkam Review in tamil
    முதல் பக்கம் திரைவிமர்சனம் | Muthal Pakkam Review in tamil

    முதல் பக்கம்

    இயக்குனர்: அனிஷ் அஷ்ரஃப்
    எடிட்டர்:விஎஸ் விஷால்
    வெளியீட்டு தேதி:2025-08-01
    Points:227

    ட்ரெண்ட்

    வாரம்12
    தரவரிசை376461
    Point15770
    கரு

    சைக்கோ கொலையாளியை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் அனீஷ்

    விமர்சனம்
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கதைக்களம்

    பிரபல எழுத்தாளரின் மகனான நாயகன் வெற்றி, தனது தந்தை இறப்புக்கு பிறகு அவரது வாழ்க்கையை புத்தகமாக எழுதும் நாயகி ஷில்பா மஞ்சுநாத்துக்கு உதவி செய்து வருகிறார். இந்நிலையில் போலீஸ் அதிகாரியாக இருக்கும் தம்பி ராமையாவுடன் வெற்றிக்கு பழக்கம் ஏற்படுகிறது. ஒரு கொலை கேசில் தம்பி ராமையாவுக்கு வெற்றி உதவி செய்கிறார்.

    வெற்றியின் திறமையை அறிந்த தம்பி ராமையா, தன்னுடனே பயணிக்க வைக்கிறார். இதே சமயம் மர்மமான முறையில் சிலர் கொலை செய்யப்படுகிறார்கள். இது ஒரு சைக்கோ கொலையாளி தான் செய்கிறான் என்பதை அறிகிறார் வெற்றி.

    இறுதியில் சைக்கோ கொலையாளி யார்? எதற்காக கொலைகள் செய்கிறான்? சைக்கோ கொலையாளியை வெற்றி கண்டுபிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் வெற்றி, தனது வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அவரது உடல் மொழி செயற்கையாக இருக்கிறது. இன்னும் கொஞ்சம் நடிப்பில் கவனம் செலுத்தி இருக்கலாம். நாயகியாக நடித்திருக்கும் ஷில்பா மஞ்சுநாத், அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்து இருக்கிறார். போலீஸ் அதிகாரியாக வரும் தம்பி ராமையா ஒரு சில இடங்களில் எதார்த்தமாகவும், ஓவர் ஆக்டிங்காகவும் நடித்து இருக்கிறார். வில்லனாக நடித்து இருப்பவரின் உடல் தகுதி மட்டுமே பொருந்தி இருக்கிறது. நடிப்பு சுத்தமாக பொருந்தவில்லை.

    இயக்கம்

    சைக்கோ கொலையாளியை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் அனீஷ் அஷ்ரப். நல்ல கதை, ஆனால் திரைக்கதை சரியாக அமைக்காதது வருத்தம். வில்லன் இறந்த பிறகும், படம் நகர்ந்து கொண்டே செல்வது சலிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கதாபாத்திரங்களை சரியாக தேர்வு செய்து இருக்கலாம்.

    இசை

    ஏஜேஆர் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பல படங்களின் பின்னணி இசையை புகுத்தி இருக்கிறார்.

    ஒளிப்பதிவு

    அரவிந்தின் ஒளிப்பதிவு சிறப்பு.

    தயாரிப்பு

    Sinnathambi Production. நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. 

    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    ×