என் மலர்


மிஷன்: இம்பொசிப்பிலே - தி பைனல் ரெசிகோனிங்
மிஷன் இம்பாசிபிள் பிரான்சீஸ்-ல் கடைசி திரைப்படமாக இப்படம் வெளியாகியுள்ளது.
கதைக்களம்
இதற்கு முன் வெளிவந்த பாகமான மிஷன் இம்பாஸிபிள் - டெட் ரெக்கனிங் பாகத்தில் டாம் க்ரூஸ் ஒரு ஆர்டிபிசியல் இண்டலிஜென்ஸ் கீயை தேடி பயணத்தில் ஈடுப்படுவார். அதில் வில்லனிடம் இருந்து அந்த கீயின் ஒரு பாதியை எடுத்து விடுவார். அதன் தொடர்ச்சியாக இந்த பாகம் அமைந்துள்ளது. செயற்கை நுண்ணறிவு இந்த உலகில் இருக்கும் அனைத்து அணு ஆயுதத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் எடுக்க முயற்சிக்கிறது. அதனை டாம் க்ரூஸ் தடுத்து இந்த உலகத்தை காப்பாத்தினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
வழக்கம் போல் டாம் க்ரூஸ் முழு படத்தையும் தன் நடிப்பால் தோளில் சுமந்துள்ளார். படத்தில் இடம் பெற்ற ஸ்டண்ட் காட்சிகளில் மிகவும் திறம்பட நடித்துள்ளார்.
மேலும் இவருடன் நடித்த ஹேலே அத்வல், விங் ராம்ஸ், சைமன் பெக், மொரால்ஸ் ஆகியோர் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர்.
இயக்கம்
இந்த ஃப்ரான்சீஸ் இறுதி பாகத்தை இயக்கியுள்ளார் கிறிஸ்டோபர் மெக்குவாரி. படத்தின் இரண்டாம் பாதி திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்க வேண்டும். படத்தின் ஸ்டண்ட் காட்சிகள் வலிய திணித்தது போல் உணர்வு ஏற்படுத்தியது. நிறைய வசன காட்சிகள் இடம் பெற்றது பார்வையாளர்களுக்கு சலிப்பை ஏற்படுத்துகிறது. மற்ற பாகங்களை ஒப்பிடும் போது இந்த பாகம் நினைத்தது போல் அமையவில்லை என கூறலாம்.
ஒளிப்பதிவு
ஃப்ரேசர் ஒளிப்பதிவு படத்தின் பெரிய பலமாக அமைந்துள்ளது.
இசை
மேக்ஸ் அருஜ் மற்றும் அல்ஃபி பின்னணி இசை ரசிக்கும்படி அமைந்துள்ளது
தயாரிப்பு
பேரமவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.







