என் மலர்tooltip icon
    < Back
    மனிதர்கள் திரைவிமர்சனம்  | Manidhargal Review in Tamil
    மனிதர்கள் திரைவிமர்சனம்  | Manidhargal Review in Tamil

    மனிதர்கள்

    இயக்குனர்: ராம் இந்திரா
    எடிட்டர்:தினேஷ் குமார்
    ஒளிப்பதிவாளர்:அஜய் ஆபிரகாம் ஜார்ஜ்
    இசை:அனிலேஷ் எல் மேத்யூ
    வெளியீட்டு தேதி:2025-05-30
    Points:357

    ட்ரெண்ட்

    வாரம்12
    தரவரிசை324384
    Point222135
    கரு

    ஒரு இரவு நண்பர்களுக்குள் மோதல், கொலை என பயமும் பதட்டமும் கலந்து மாறுபட்ட திரில்லர் படமாக உருவாகியுள்ளது.

    விமர்சனம்

    கதைக்களம்

    நெருங்கிய நண்பர்களான கபில் வேலவன், தக்சா, குனவந்தன், அர்ஜுன் தேவ், சரவணன், சாம்பசிவம் ஆகியோர் திண்டுக்கல் அருகே ஒரு இடத்தில் அமர்ந்து ஒன்றாக மது அருந்துகின்றனர். திடீரென அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டு ஒருவருக்கொருவர் தாக்குதலில் ஈடுபடுகின்றனர்.

    தாக்குதலில் எதிர்பாராத விதமாக நண்பர்களில் ஒருவர் இறந்து விடுகிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் ஐந்து பேரும் இறந்து போன நண்பன் உடலை யாருக்கும் தெரியாமல் புதைக்க செல்கின்றனர்.

    அப்போது திடீரென நண்பனின் உடல் அசைவதை கண்டு பதட்டமடைந்த நண்பர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயல்கின்றனர். அப்போது மீண்டும் அவர்களுக்குள் மோதல் ஏற்படுகிறது.

    இறுதியில் நண்பர்களின் மோதல் என்ன ஆனது? எதற்காக மோதல் ஏற்பட்டது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    பயமும் தைரியமும் கலந்து வில்லத்தனத்தோடு காட்சிகளில் நல்ல நடிப்பை கொடுத்துள்ளார் கபில் வேலவன். அவரோடு தக்சா, குணவந்தன், அர்ஜுன் தேவ், சரவணன், சாம்பசிவம் ஆகியோர் நடிப்பு கதைக்கு கூடுதல் பலம்.

    இயக்கம்

    ஒரு இரவு நண்பர்களுக்குள் மோதல், கொலை என பயமும் பதட்டமும் கலந்து மாறுபட்ட திரில்லர் படமாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் ராம் இந்திரா. நண்பர்களுக்கிடையே நடைபெறும் சம்பவங்களை அடுத்தடுத்து என்ன என்று எதிர்பார்ப்போடும் திரில்லரோடும் உருவாக்கி இருக்கிறார். ஒரு சில இடங்களில் திரைக்கதை சுவாரசியம் இல்லாமல் நகர்கிறது.

    ஒளிப்பதிவு

    காருக்குள்ளே நடைபெறும் பெரும்பாலான காட்சிகளில் அஜய் ஆபிரகாம் ஜார்ஜ் ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது.

    இசை

    அணிலேஷ் மாத்தியா இசையில் பாடல்கள் சம்பந்தமில்லாமல் இருக்கிறது. பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.

    தயாரிப்பு

    Studio Moving Turtle & Sri Krish Pictures நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    ×