என் மலர்


மகா அவதார் நரசிம்மா
கடவுள் விஷ்ணுவின் தீவிர பக்தரான சிறுவன் பிரகலாதனின் கதைதான் மகா அவதார் நரசிம்மா.
கதைக்களம்
கடவுள் விஷ்ணுவின் தீவிர பக்தரான சிறுவன் பிரகலாதனின் கதைதான் மகா அவதார் நரசிம்மா. பிரகலாதனின் பக்தியால் பரவசமடைந்த விஷ்ணு, நரசிம்மர் அவதாரம் எடுத்து அசுரனை அழித்ததை திரைக்கதையாக கொடுத்து இருக்கிறார்கள்.
இயக்கம்
மக்கள் பலருக்கும் தெரிந்த கதை என்றாலும், அதை தற்போதைய தலைமுறையினர் தெரிந்துக்கொள்ள வேண்டிய நோக்கத்துடனும், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்த்து மகிழும்படியான அனிமேஷன் திரைப்படமாக கொடுத்திருக்கிறார்கள்.
சிறுவர்களுக்கு புரியும்படியும், ரசிக்கும்படியும் கதையை நகர்த்தியிருப்பதோடு, பிரமாண்டமான அனிமேஷன் காட்சிகள் மூலம் வியக்க வைத்திருக்கிறார்கள். அனிமேஷன் காட்சிகள் போல் இல்லாமல் நிஜத்தில் மனிதர்கள் நடித்த உணர்வை இப்படம் கொடுத்து இருக்கிறது. வசன உச்சரிப்பு, இசை, காட்சியமைப்பு என அனைத்தையும் சரியாக கையாண்டு சிறந்த திரையரங்க அனுபவத்தை கொடுத்து இருக்கிறார்கள்.
கிராபிக்ஸ்
அனிமேஷன், கிராபிக்ஸ் காட்சிகள் அனைத்தும் சிறப்பு. குறிப்பாக கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி, நரசிம்மா அவதாரத்தில் விஷ்ணு தோன்றுவது ஆகியவை ரசிக்க வைக்கின்றன.
இசை
சாம். சி எஸ் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார்.
தயாரிப்பு
Kleem Productions தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
Excellent






