என் மலர்


காயல்
.
கதைக்களம்
நாயகி காயத்ரி தந்தை, தாயுடன் வாழ்ந்து வருகிறார். நாயகன் லிங்கேஷை காதலிக்கும் காயத்ரி, தனது தந்தைக்கு அவரை அறிமுகம் செய்து வைக்கிறார். தந்தையோ காயத்ரி, லிங்கேஷ் காதலுக்கு பச்சை கொடி காட்டுகிறார்.
ஆனால், காயத்ரியின் தாய் அனுமோல், லிங்கேஷ் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். சில நாட்களில் காயத்ரிக்கு உறவுக்காரருடன் திருமணம் நடக்கிறது. இந்நிலையில், காயத்ரி தற்கொலை செய்து கொள்கிறார்.
இறுதியில் காயத்ரி ஏன் தற்கொலை செய்து கொண்டார்? தற்கொலை செய்ய காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் லிங்கேஷ் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இவரது ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பு கவனிக்க வைத்திருக்கிறது. காதல், ஏக்கம், துயரம் என நடிப்பில் வித்தியாசம் காண்பித்து இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் காயத்ரி கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். மற்றோரு நாயகியாக வரும் ஸ்வாகதாவின் நடிப்பு, ஓவர் ஆக்டிங்காக இருக்கிறது. தந்தை, தாய் இருவரும் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். ரமேஷ் திலக்கின் நடிப்பு சிறப்பு.
இயக்கம்
மனிதர்களின் யதார்த்த நிலையை படமாக்கி இருக்கிறார் இயக்குனர் தமயந்தி. காதல், அப்பா மகள் பாசம், சாதிய பாகுபாடு என திரைக்கதை கலந்து கொடுத்து இருக்கிறார். ஒரு சில இடங்களில் குறைகள் இருந்தாலும் பெரியதாக தெரியவில்லை. திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம் கூடுதலாக ரசித்து இருக்கலாம்.
இசை
ஜஸ்டின் இசையில் பாடல்கள் சிறப்பு, பின்னணி இசை படத்திற்கு பலம்.
ஒளிப்பதிவு
கார்த்திக் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.
தயாரிப்பு
J ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.











