என் மலர்tooltip icon
    < Back
    இட்லி கடை திரைவிமர்சனம் | Idly Kadai Review in tamil
    இட்லி கடை திரைவிமர்சனம் | Idly Kadai Review in tamil

    இட்லி கடை

    இயக்குனர்: தனுஷ்
    எடிட்டர்:பிரசன்னா ஜிகே
    இசை:ஜி. வி. பிரகாஷ் குமார்
    வெளியீட்டு தேதி:2025-10-01
    Points:21630

    ட்ரெண்ட்

    வாரம்123456
    தரவரிசை72429945752
    Point79158588472022015136
    கரு

    கிராமத்து மண்வாசனை நிறைந்த படம் இட்லி கடை.

    விமர்சனம்
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    நாயகன் தனுஷ், தந்தை ராஜ்கிரண், தாய் கீதா கைலாசம் ஆகியோருடன் கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். ராஜ்கிரண் சொந்தமாக சிவநேசன் என்ற பெயரில் இட்லி கடை நடத்தி வருகிறார். இந்த இட்லி கடை ஊரின் அடையாளமாக இருக்கிறது. ஆனால், தனுஷுக்கு கிராமத்தில் வாழ விருப்பம் இல்லாமல் வெளிநாட்டிற்கு செல்கிறார்.

    வெளிநாட்டில் மிகப்பெரிய தொழில் அதிபராக இருக்கும் சத்யராஜ் மகள் ஷாலினி பாண்டேவுக்கும் தனுஷுக்கு திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடக்கிறது. இந்நிலையில் தனுஷின் தந்தை ராஜ்கிரனும் தாய் கீதா கைலாசமும் இறக்கிறார்கள். கிராமத்திற்கு திரும்பி வரும் தனுஷ், வெளிநாட்டிற்கு செல்ல மறுக்கிறார். மேலும் ராஜ்கிரண் நடத்தி வந்த இட்லி கடையை நடத்த முடிவு செய்கிறார்.

    இவரது இந்த முடிவால், தனுஷ், ஷாலினி பாண்டே திருமணம் நின்று விடுகிறது. இதனால் கோபமடையும் ஷாலினி பாண்டேவின் அண்ணன் அருண் விஜய், கிராமத்திற்கு வந்து தனுஷுடன் சண்டை போடுகிறார். அதே சமயம் இட்லி கடைக்கு எதிரே பரோட்டா கடை நடத்தி வரும் சமுத்திரக்கனி தொழில் போட்டியால் தனுஷை ஒழிக்க நினைக்கிறார்.

    இறுதியில் தனுஷ் இட்லி கடையை தொடர்ந்து நடத்தினாரா? அருண் விஜய் தனுஷை என்ன செய்தார்? சமுத்திரக்கனியின் திட்டம் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் தனுஷ், எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அப்பா, அம்மாவை நினைத்து வருந்தும் காட்சியில் கண்கலங்க வைத்து இருக்கிறார். இட்லி கடை எப்படியாவது நடத்த வேண்டும் என்று முயற்சி செய்யும் காட்சியில் கவனிக்க வைத்து இருக்கிறார்.

    நாயகியாக நடித்திருக்கும் நித்யா மேனன், தனுஷுக்கு உறுதுணையாக படம் முழுக்க பயணித்து ஸ்கோர் செய்து இருக்கிறார். இவரது வெகுளித்தனமான நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது. அருண் விஜய் மிகவும் கோபக்காரனாகவும், ஈகோ உள்ளவராகவும் கம்பீரத்துடன் நடித்து இருக்கிறார்.

    ராஜ்கிரண், சத்யராஜ், கீதா கைலாசம், இளவரசு ஆகியோர் அனுபவ நடிப்பை கொடுத்து இருக்கிறார்கள். போலீஸ் அதிகாரியாக வரும் பார்த்திபன் கிடைக்கும் இடங்களில் எல்லாம் சர்ப்ரைஸ் ஆன நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஷாலினி பாண்டே அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்து இருக்கிறார்.

    இயக்கம்

    நடிப்பு மட்டுமில்லாமல் படம் இயக்குவதிலும் தான் சிறந்தவன் என்று நிரூபித்து இருக்கிறார் இயக்குனர் தனுஷ். உண்மை கதையை கொஞ்சம் சினிமா ஸ்டைலில் சொல்லி இருக்கிறார். கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். குறிப்பாக முதல் பாதியில் அம்மா, அப்பா பற்றி பேசும் காட்சிகள் படத்திற்கு பக்க பலமாக அமைந்து இருக்கிறது. வசனங்கள் மற்றும் கன்னுக்குட்டி காட்சிகள் சிறப்பு.

    இசை

    ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் அனைத்தும் தாளம் போட வைத்து இருக்கிறது. பின்னணி இசையில் பல காட்சிகளுக்கு உயிர் கொடுத்து இருக்கிறார்.

    ஒளிப்பதிவு

    கிரண் கவுசிக்கின் ஒளிப்பதிவு கிராமத்து அழகை மண்மணம் மாறாமல் இருக்கிறது.

    தயாரிப்பு

    ஆகாஷ் பாஸ்கரன், தனுஷ்

    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    வாசகர் விமர்சனம்
    2025-10-03 03:39:57.0
    Venkatesan

    2025-10-02 08:42:05.0
    THIAGARAJAN PK

    "இந்தப் படத்தில் காட்டியிருக்கும் இட்லி சம்பந்தப்பட்ட காட்சி தவறாக உள்ளது. பொதுவாக மக்கள் மாலையில் மாவு அரைத்து, அதை இரவு முழுவதும் புளிக்கவைத்து, காலையில் இட்லி வேகவைத்து சாப்பிடுவார்கள். ஆனால் இந்தப் படத்தில் காலை 4 மணிக்கு தான் மாவு அரைத்து உடனே இட்லி வேகவைத்துக் காட்டியிருக்கிறார்கள். இது நடைமுறைக்கு முரணானது. மேலும், இந்தப் படத்தின் கரு இட்லி என்பதால், இப்படிப்பட்ட முக்கியமான விஷயத்தில் கூட சரியான கவனம் செலுத்தப்படவில்லை."

    ×