என் மலர்


எலியோ
ஏலியன் உலகத்திற்கு செல்லும் சிறுவனின் கதை
கதைக்களம்
கதாநாயகனான சிறுவன் எலியோ தன் தாய் மற்றும் தந்தையின் இறப்பிற்கு பின் அவரது சித்தியின் அரவணைப்பில் வளர்கிறார். எலியோவிற்கு விண்வெளி, ஏலியன், பிரபஞ்சம் மீது பெரிதும் ஆர்வம் மிக்க சிறுவனாக இருக்கிறான். பூமியில் உள்ள மனிதர்கள் மீது அவனுக்கு பெரிதும் ஈடுபாடில்லை.
நம்மைப் போல் வேறொரு யூனிவெர்சில் உயிரினங்கள் மற்றும் ஏலியன்கள் வாழ்ந்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என நம்பும் சிறுவன் எலியோ. அவர்களை எப்படியாவது தொடர்பு கொள்ள வேண்டுமென முயற்சிக்கிறான். அதேப்போல் ஒரு சூழ்நிலை அமைய அவன் ஏலியனுடன் தொடர்புக் கொண்டு தன்னை வேற்று கிரகத்திற்கு அழைத்து செல்லுமாறு கூற, இதை கேட்ட ஏலியன்கள் அவர்களது கிரகத்திற்கு எலியோவை அழைத்து செல்கின்றனர். பூமியின் தலைவன் என எலியோவை அழைத்துச் செல்கிறார்கள் வேற்று கிரக வாசிகள். அங்கு சென்ற எலியோ என்ன செய்தான்? என்ன கற்றுக் கொண்டான்? அங்கு அவன் யாரை சந்தித்தான்.. மீண்டும் பூமிக்கு திரும்பினானா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் மிக முக்கிய கதாப்பாத்திரமாக வரும் எலியோ மற்றும் க்ளார்டன் என வரும் ஏலியன் கதாப்பாத்திரம் அட்டகாசமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
இயக்கம்
ஒரு இட்ரோவர்ட் சிறுவன் இந்த சமூகத்தில் படும் கஷ்டங்கள் மற்றும் இந்த படத்தின் மூலம் அவனின் பார்வையில் ஒரு புதிய உலகத்தை காண்பித்துள்ளனர். மேலும் எமோஷனல் காட்சிகள் மிகவும் கனெக்டாக இருந்தது படத்தின் பலம். அனிமேஷன் மற்றும் டெக்னிக்கல் டீம் வழக்கம் போல் கலக்கியுள்ளனர். ஏலியன் ஸ்பேஸ்ஷிப்பில் உள்ள உயிரினங்கள், கதாப்பாத்திர வடிவம் என அனைத்தும் சிறப்பாக செய்துள்ளனர்.
ஒளிப்பதிவு & கிராபிக்ஸ்
ஜார்டன், டெரெக் வில்லியம்ஸ் மற்றும் கிராபிக்ஸ் காட்சிகள் நம்மை வேற்று கிரகத்திற்கே கொண்டு செல்கிறது
இசை
ராப் சைமன்சன் இன் பின்னண் இசை படத்திற்கு கூடுதல் பலம்
தயாரிப்பு
எலியோ திரைப்படத்தை பிக்சார் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது






