என் மலர்tooltip icon
    < Back
    Bloody Beggar :பிளடி பெக்கர் Trailer, Review, Cast & Crew, OTT Release Details in Tamil
    Bloody Beggar :பிளடி பெக்கர் Trailer, Review, Cast & Crew, OTT Release Details in Tamil

    பிளடி பெக்கர்

    இயக்குனர்: சிவபாலன் முத்துக்குமார்
    எடிட்டர்:நிர்மல்
    இசை:ஜென் மார்ட்டின்
    வெளியீட்டு தேதி:2024-10-31
    Points:5520

    ட்ரெண்ட்

    வாரம்1234
    தரவரிசை909994164
    Point18922592101620
    கரு

    ஒரு பிச்சைக்காரன் பணக்கார வீட்டில் சிக்கிக்கொள்ளும் கதை

    விமர்சனம்
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கதைக்களம்

    கவின் ஒரு பிச்சைக்காரனாக இருக்கிறார். ஒரு நாள் பார்வையற்றவனாக, ஒரு நாள் கால் இல்லாத ஊனமுற்றோராக என நடித்து பிச்சை எடுத்து வருகிறார். இந்நிலையில் சமூகத்தில் பெரிய அந்தஸ்த்தும் செல்வாக்கும் உள்ள ஒரு நபர் இறந்துவிட அவரின் நினைவாக ஆதரவற்றவர்களுக்கு விருந்தளிக்க ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்கின்றனர். அப்பொழுது அந்த ஆதரவற்ற ஒருவராக கவின் அந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள அந்த ஆடம்பர பங்களாவில் நுழைகிறார். நீண்ட நாளாக கவினுக்கு அந்த மாளிகையில் நுழைய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு அந்த மாளிகையில் என்ன இருக்கிறது என பார்க்கும் ஆர்வத்தில் உள்ளே நுழைகிறார். மாளிகையில் நுழைந்தப்பின் சிக்கல் ஏற்படுகிறது. இதனால் கவினின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. அப்படி என்ன சிக்கல் இருக்கிறது அந்த மாளிகையில் ? கவின் உயிர் தப்பித்து மாளிகையில் இருந்து வெளிவந்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    கவின் பிச்சைக்காரன் கதாப்பாத்திரத்திற்கு பொருந்தும் விதமாக தனது நடிப்பில் மிரட்டியுள்ளார். கவின் மற்றும் ரெடின் கிங்ஸ்லி இருவருக்கும் இடையே உள்ள நகைச்சுவை காட்சிகள் நிறைய இடத்தில் வொர்க் அவுட் ஆகியுள்ளது. மாருதி பிரகாஷ்ராஜ், சுனில், கார்த்திக், அக்‌ஷயா ஹரிஹரன் மற்றும் நடித்த நடிகர்கள் அனைவரும் அவர்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளனர்.

    இயக்கம்

    ஒரு பிச்சைக்காரன் பணக்கார வீட்டில் சிக்கிக்கொண்டால் என்ன ஆகும் என கற்பனை கதையை நகைச்சுவை தன்மையுடன் இயக்கியுள்ளார் இயக்குனர் சிவபாலன் முத்துகுமார். திரைப்படம் தொடங்கி 20 நிமிடங்களிலே மாளிகைக்குள் கவின் செல்ல பின் திரைப்படம் இறுதிவரை கதை மாளிகைக்குள்ளே நகர்கிறது இது பார்வையாளர்களுக்கு சோர்வை தருகிறது. நகைச்சுவை மற்றும் எமோஷனல் காட்சிகள் படத்தில் பல இடங்களில் சிறப்பாக அமைந்துள்ளது. இரண்டாம் பாதியில் நீளத்தை சற்று குறைத்து இருந்தால் படம் கூடுதல் ரசிக்க பட்டிருக்கும்.

    இசை

    ஜென் மார்டின் இசை படத்திற்கு கூடுதல் பலம். படத்தில் இடம்பெற்றுள்ள பொன்மாயமே என்ற பாடல் மிகவும் எமோஷனலாக அமைந்துள்ளது.

    ஒளிப்பதிவு

    படத்தின் பெரும்பாலான பகுதி மாளிகைக்குள் நடக்கிறது இதை மிகவும் சுவாரத்தியுடனும் நேர்த்தியாகவும் கையாண்டுள்ளார் ஒளிப்பதிவாளர் சுஜித் சரங்.

    தயாரிப்பு

    ஃபிலாமெண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    ×