என் மலர்


ஆர்யமாலா
உரிய வயதில் பெண் பருவம் அடையாத சிறுமியின் கதை
கதைக்களம்
திரைப்படம் 1982 ஆம் ஆண்டில் நடக்கக்கூடிய கதைக்களமாகும். கதாநாயகியான மனிஷா ஜித்தின் தாய் இறந்துவிடுகிறாள்.இதனால் அவரது தந்தை மற்றொரு திருமணத்தை செய்துக்கொள்கிறார். அந்த தம்பதியர்க்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. இரு மகள்கள் அந்த வீட்டில் வளர்கின்றனர். மூத்தவளான மனிஷா பருவ வயதை கடந்த பின்னரும் பூப்படையாமல் இருக்கிறார். இவருடைய தங்கை ஒரு நாள் பருவ வயதுக்கு வந்து விடுகிறார்.
இந்நிலையில் இந்த செய்தியை ஊர் மக்களுக்கு தெரிய வருகிறது. இதனால் உறவினர்களும் ஒரு மாதிரி பேச. மனிஷாவின் தங்கையை அவரது உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைக்கின்றனர். பின் மனிஷா ஊர் காவல் தெய்வத்தை பிரார்த்தனை செய்கிறாள். சித்த வைத்தியரிடமும் மருந்து வாங்கி சாப்பிடுகிறாள். 48 நாட்களுள் பூப்படைந்து விடுவோம் என்ற நம்பிக்கையில் இருக்கிறாள். அப்பொழுது மனிஷாவின் கனவில் நாயகன் ஆர்.எஸ் கார்த்திக் வருகிறார்.
கனவில் வந்த அதே நாயகன் மனிஷா ஊர் திருவிழாவில் தெருக்கூத்து கலைஞனாக வருகிறார். கனவில் கண்டவரை நிஜத்தில் பார்த்ததும் மனிஷாவுக்கு ஆர்.எஸ் கார்த்திக் மேல் காதல் வருகிறது. இது நாளடைவில் ஆர்.எஸ் கார்த்திக்கும் தெரிய வருகிறது. காதலை ஆர்.எஸ் கார்த்திக் கூற வரப்போகும் போது மனிஷா அதை மறுக்கிறாள். இதற்கு அடுத்து என்ன ஆனது? மனிஷாவின் காதல் என்ன ஆனது? மனிஷா பூப்படைந்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
கதாநாயகியான மனிஷா ஜித் கதாப்பாத்திரத்தை உணர்ந்து, காதல், வேதனை, இயலாமை என நடிப்பில் வித்தியாசம் காட்டியுள்ளார். ஆர்.எஸ் கார்த்திக் தெருக்கூத்து கலைஞனாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
இயக்கம்
1980- களில் நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி இயக்கியுள்ளார் இயக்குனர் ஜேம்ஸ் யுவன். கதைக்களம் பார்வையாளர்களுக்கு ஒட்டவும் இல்லை பொருந்தவும் இல்லை. திரைக்கதை தெளிவில்லாமல் இருப்பது பார்வையாளர்களிடம் சலிப்பை ஏற்படுத்துகிறது. படத்தின் இரண்டாம் பாதியில் நாடகத்தை வைத்தே கதையை நகர்த்தியது பலவீனம்.
இசை
செல்வநம்பியின் இசை படத்திற்கு பலம்’
ஒளிப்பதிவு
ஜெய்ஷங்கர் ராமலிங்கத்தின் ஒளிப்பதிவு தெளிவாக இருந்தது.
தயாரிப்பு
ஜனா ஜாய் மூவீஸ், கேபிஸ் ஷங்கர் மற்றும் எஸ்பிஆர் சினிமாஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது









