என் மலர்
மேஷம்
வார ராசிபலன் 23.11.2025 முதல் 29.11.2025 வரை
23.11.2025 முதல் 29.11.2025 வரை
மேஷம்
வேகத்துடன், விவேகத்தையும் கடைபிடிக்க வேண்டிய வாரம். ராசி அதிபதி செவ்வாய் 2,7ம் அதிபதி சுக்ரன் மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சூரியனுடன் சேர்ந்து அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். ராசி அதிபதி செவ்வாய்க்கு 2,5,8 எனும் பணபரஸ்தான சம்பந்தம் இருப்பதால் பணத் தேவைகள் பூர்த்தியாகும். வராக் கடன்கள் வசூல் ஆகும்.
பொருளாதார ரீதியாக இருந்த பிரச்சனைகள் அகலும். தன வரவு திருப்தி தரும். ஆடம்பர செலவினை குறைத்து சேமிப்பிற்கு முயற்சி செய்வீர்கள். குடும்ப முன்னேற்றம் கூடும். பழைய கடன்களை அடைப்பீர்கள். புதிய உத்தியோக முயற்சிகள் பலிக்கும். ஆரோக்கியத் தொல்லைகள் அகலும். சகோதர சகோதரிகளால் நன்மைகள் உண்டாகும்.
சிலருக்கு பூர்வீக சொத்து தொடர்பான வம்பு வழக்குகள் உருவாகலாம். வண்டி வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. சில பெண்களுக்கு மாங்கல்ய தோஷத்தால் திருமணத்தடை இருக்கும். வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்வீர்கள். சிறிய முதலீட்டில் அதிக லாபம் பார்ப்பீர்கள். நண்பர்கள், உறவினர்கள் உங்களுக்கு நட்புக்கரம் நீட்டுவார்கள். காலபைரவர் வழிபாடு நன்மையை அதிகரிக்கும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






