என் மலர்
மேஷம்
வார ராசிபலன் 14.9.2025 முதல் 20.9.2025 வரை
14.9.2025 முதல் 20.9.2025 வரை
புதிய வளர்ச்சிக்கான பாதை உருவாகும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் சம சப்தம பார்வையால் ராசியை பார்க்கிறார். ராசி பலம் பெறுவதால் செயல்பாடுகளில் ஏற்பட்ட தடை தாமதங்கள் அகலும். வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். பிரச்சினைகளுக்கு மத்தியில் வாழ்ந்த உங்களுக்கு புதிய நம்பிக்கை, தைரியம் கூடும்.
புதிய வீடு கட்டுதல், வீட்டை விரிவு செய்தல், நவீன பொருட்களை சேர்த்தல் போன்ற எண்ணங்கள் அதிகரிக்கும். கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல்களால் கூட்டுத் தொழிலில் மந்த நிலை ஏற்படும். வேலைப் பளு சற்று அதிகரிக்கும். சிலருக்கு உஷ்ண நோய் அல்லது கண் தொடர்பான மருத்துவ சிகிச்சை செய்ய நேரும். பருவ வயதினருக்கு திருமணம் நிச்சயமாகும்.
பொருளாதாரம் சிறப்பாக அமைந்து குடும்பத் தேவைகள் நிறைவு பெறும். சொத்துக்கள் மீதான வழக்குகள் தள்ளுபடியாகும் அல்லது தீர்ப்பு சாதகமாகும். மாணவர்கள் தடைபட்ட படிப்பை மீண்டும் தொடரக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. மகாளய பட்ச காலத்தில் விலங்குகளுக்கு உணவிடுவதால் பொருளாதார குற்றம் நீங்கும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






