என் மலர்tooltip icon

    மேஷம்

    வார ராசிப்பலன்

    இந்த வாரம் எப்படி 16-5-2022 முதல் 22-5-2022 வரை

    பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சூரியன் தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வியாபாரத்தில் நிலவிய மந்தநிலை நீங்கி நல்ல முன்னேற்றமான பலன்கள் ஏற்படும். வியாபாரிகளுக்கு அரசின் மானியம் கிடைக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். 6-ம் அதிபதி புதன் வக்ரம் பெற்றதால் கொடுத்த கடன்கள் வசூலாகும். மருத்துவச் செலவுகள் குறையும்.

    தாய்வழிச் சொத்துப் பிரச்சினையில் எதிர்பாராத திருப்புமுனை உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் சிறப்பாக செயல்படுவார்கள். 7-ம் அதிபதி சுக்ரன் உச்சம் பெற்றதால் ஆடம்பர பொருட்களை பரிசளித்து வாழ்க்கைத் துணையை மகிழ்ச்சியடையச் செய்வீர்கள். 7-ல் கேது இருப்பதால்வா டிக்கையாளர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும்.

    16.5.2022 காலை 7.53 முதல் 18.5.2022 காலை 8.09 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் திடீர் செலவுகள் ஏற்படலாம். தினமும் கந்த சஷ்டி கவசம் கேட்கவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×