புதிய கேஜெட்டுகள்

IPX4 வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்ட ரெட்மி பட்ஸ் 4 ஆக்டிவ் அறிமுகம்

Published On 2023-06-05 03:06 GMT   |   Update On 2023-06-05 03:06 GMT
  • ரெட்மி பட்ஸ் 4 ஆக்டிவ் இயர்பட்ஸ் மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
  • இந்த இயர்பட்ஸ்-இல் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

சியோமி நிறுவனத்தின் ரெட்மி பட்ஸ் 4 ஆக்டிவ் மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. முன்னதாக இந்த இயர்பட்ஸ் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது. ரெட்மி பட்ஸ் 4 ஆக்டிவ் மாடலில் அதன் முந்தைய வெர்ஷனை விட மேம்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

அதன்படி புதிய பட்ஸ் 4 ஆக்டிவ் மாடலில் 12mm டிரைவர்ள், ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி, டிரான்ஸ்பேரண்ட் மோட்கள் உள்ளன. முந்தைய பட்ஸ் 4 மாடலில் 10mm டிரைவர்கள் வழங்கப்பட்டு இருந்தது. மேலும் நாய்ஸ் கேன்சலேஷன் ஆப்ஷன் வழங்கப்படாமல் இருந்தது. ரெட்மி பட்ஸ் 4 ஆக்டிவ் மாடலில் IPX4 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.

டிசைனை பொருத்தவரை புதிய பட்ஸ் 4 ஆக்டிவ் மாடல் அதன் முந்தைய வெர்ஷனை விட வித்தியாசமாக காட்சியளிக்கிறது. இதில் அளவில் பெரிய இயர்பட்ஸ், வட்ட வடிவிலான சார்ஜிங் கேஸ் உள்ளது. இந்த இயர்பட்ஸ்-ஐ முழுமையாக சார்ஜ் செய்தால் 28 மணி நேரத்திற்கான பேக்கப் வழங்குகிறது. இயர்பட்ஸ் மட்டும் ஐந்து மணி நேரத்திற்கு பயன்படுத்த முடியும்.

ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட ரெட்மி பட்ஸ் 4 ஆக்டிவ் மாடலை பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் அதிகபட்சம் இரண்டு மணி நேரத்திற்கு பிளேடைம் கிடைக்கும். இந்த இயர்பட்ஸ் ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டி மற்றும் கூகுள் ஃபாஸ்ட் பேர் தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது. இத்துடன் ஏராளமான டச் கண்ட்ரோல் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

ரெட்மி பட்ஸ் 4 ஆக்டிவ் மாடலின் மொத்த எடை 42 கிராம் ஆகும். இதன் சார்ஜிங் கேசில் 440 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த இயர்பட்ஸ் எஸ்.பி.சி. கோடெக் மட்டுமே சப்போர்ட் செய்கிறது. மேலும் இது பிளாக் நிறத்தில் மட்டுமே கிடைக்கிறது. புதிய ரெட்மி பட்ஸ் 4 ஆக்டிவ் மாடலின் விலை விவரங்கள் இதுவரை வழங்கப்படவில்லை.

Tags:    

Similar News