புதிய கேஜெட்டுகள்

புது ஸ்மார்ட்போன் விலையை சூசகமாக தெரிவித்த ரியல்மி

Published On 2022-11-28 07:07 GMT   |   Update On 2022-11-28 07:07 GMT
  • ரியல்மி நிறுவனம் சமீபத்தில் தான் புதிய ரியல்மி 10 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போன்களை சீன சந்தையில் அறிமுகம் செய்தது.
  • புதிய ரியலமி 10 ப்ரோ சீரிஸ் மாடல்கள் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

ரியல்மி 10 ப்ரோ சீரிஸ் மாடல்கள் இந்தியாவில் டிசம்பர் 8 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளன. இதில் ரியல்மி 10 ப்ரோ மற்றும் ரியல்மி 10 ப்ரோ பிளஸ் என இரு மாடல்கள் இடம்பெற்றுள்ளன. ரியல்மி துணை தலைவர் மாதவ் சேத் புதிய ரியல்மி 10 ப்ரோ சீரிஸ் இந்திய விலையை சூசகமாக தெரிவிக்கும் டீசரை வெளியிட்டு இருக்கிறார்.

அதன்படி இந்தியாவில் ரியல்மி 10 ப்ரோ பிளஸ் மாடல்களின் விலை ரூ. 25 ஆயிரத்திற்கும் குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் வளைந்த டிஸ்ப்ளே வழங்கப்படும் என தற்போதைய டீசரில் தெரியவந்துள்ளது. முன்னதாக சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி 10 ப்ரோ மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 1080 பிராசஸர், ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ரியல்மி யுஐ 4.0 வழங்கப்பட்டு இருக்கிறது.

ரியல்மி தலைமை செயல் அதிகாரி மாத் சேத் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டரில் வெளியிட்டு இருக்கும் வீடியோவின் படி ரியல்மி 10 ப்ரோ பிளஸ் மாடலின் விலை ரூ. 25 ஆயிரத்திற்குள் நிர்ணயம் செய்யப்படும் என தெரியவந்துள்ளது. முந்தைய தகவல்களில் ரியல்மி 10 ப்ரோ சீரிஸ் மாடல் இந்தியாவில் டிசம்பர் 8 ஆம் தேதி மதியம் 12.30 மணிக்கு அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

சீன சந்தையில் இம்மாத துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி 10 ப்ரோ சீரிஸ் விலை CNY 1699, இந்திய மதிப்பில் ரூ. 19 ஆயிரத்து 500 என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை CNY 2299, இந்திய மதிப்பில் ரூ. 26 ஆயிரத்து 500 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

ரியல்மி 10 ப்ரோ சீரிஸ் அம்சங்கள்:

அம்சங்களை பொருத்தவரை ரியல்மி 10 ப்ரோ மாடலில் LCD ஃபிளாட் டிஸ்ப்ளே, ப்ரோ பிளஸ் மாடலில் வளைந்த எட்ஜ்கள், OLED பேனல், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. ரியல்மி 10 ப்ரோ சீரிஸ் மாடல்களில் கிரேடியண்ட் பேக் பேனல் டிசைன், இரு கேமரா சென்சார்கள், 108MP பிரைமரி கேமரா, 2MP மேக்ரோ லென்ஸ் கொண்டிருக்கின்றன.

ரியல்மி 10 ப்ரோ பிளஸ் மாடலில் 8MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ் உள்ளது. ரியல்மி 10 ப்ரோ மாடலில் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர், ப்ரோ பிளஸ் மாடலில் டிமென்சிட்டி 1080 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இரு ஸ்மார்ட்போன்களிலும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. ரியல்மி ப்ரோ மாடலில் 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், ப்ரோ பிளஸ் மாடலில் 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

Similar News