வேற லெவல் அப்கிரேடுகளுடன் இன்ஸ்டா360 கோ 3 அறிமுகம் - விலை எவ்வளவு தெரியுமா?
- இன்ஸ்டா360 கோ 3 மாடலில் அசத்தலான அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
- இன்ஸ்டா360 கோ 3 ஆக்ஷன் கேமரா ஆன்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் சாதனங்களுடன் இணைந்து இயங்கும்.
இன்ஸ்டா360 நிறுவனத்தின் புதிய கோ 3 ஆக்ஷன் கேமரா அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இது அந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த கோ 2 மாடலை விட மேம்பட்ட அம்சங்கள் நிறைந்த புதிய வெர்ஷன் ஆகும். புதிய இன்ஸ்டா360 கோ 3 மாடலின் குறிப்பிடத்தக்க அம்சம் ஆக்ஷன் பாட் (Action Pod) ஆகும். இதில் ப்ளிப் செய்யக்கூடிய டச் ஸ்கிரீன் உள்ளது.
வெறும் 35 கிராம் எடை கொண்டிருக்கும் புதிய இன்ஸ்டா360 கோ 3 மாடல் அளவில் மிகவும் கச்சிதமாக இருக்கும் வகையில் டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. இன்ஸ்டா360 கோ 3 மாடலில் அசத்தலான அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதில் உள்ள கேமரா f2.2 அப்ரேச்சர், 11.24mm ஃபோக்கல் லென்த் கொண்டிருக்கிறது. இவை பல்வேறு ரெசல்யூஷன் மற்றும் ஃபார்மேட்களில் (INSP, DNG போட்டோ, வீடியோக்களுக்கு MP4) புகைப்படங்களை படமாக்க செய்கிறது.
வீடியோக்களை 1080 பிக்சல், 1440 பிக்சல் மற்றும் 2.7K ரெசல்யூஷன்களில் 24, 25, 30 மற்றும் 50 ஃபிரேம் ரேட்களில் பதிவு செய்யும் திறன் கொண்டுள்ளன. இதன் 2.7K ரெசல்யூஷன் 50fps சப்போர்ட் கொண்டிருக்கவில்லை. இவை மட்டுமின்றி மூன்று வீடியோ பதிவு செய்யும் மோட்கள்: பிரீ-ரெக்கார்டிங், லூப் ரெக்கார்டிங் மற்றும் டைம்டு கேப்ச்சர் வழங்கப்பட்டு உள்ளது.
இதில் டைம்டு கேப்ச்சர் மோட் கொண்டு பயனர்கள் குறிப்பிட்ட நேரத்தில் கேமரா ரெக்கார்டிங் தானாக ஸ்டார்ட் செய்ய வைக்க முடியும். இதன் மூலம் டைம்-லேப்ஸ் வீடியோக்களை பதிவு செய்யலாம். இத்துடன் இதில் உள்ள ஃபிரீஃபிரேம் மோட் (FreeFrame Mode) கொண்டு பயனர்கள் வீடியோ பதிவு செய்த பிறகு, அதன் ஆஸ்பெக்ட் ரேஷியோவை மாற்ற முடியும். இதன் மூலம் பயனர்கள் தங்களது வீடியோக்களை இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் அல்லது யூடியூப் என பல்வேறு தளங்களுக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ளலாம்.
இன்ஸ்டா360 கோ 3 கேமராவில் 6-ஆக்சிஸ் கைரோஸ்கோப், ஃபுளோஸ்டேட் ஸ்டேபிலைசேஷன் மற்றும் 360 ஹாரிசான் லாக் போன்ற வசதிகள் உள்ளன. இந்த அம்சங்கள் வீடியோக்கள் சீராகவும், ஃபிரேம்கள் அதிர்வுகள் இன்றி தெளிவாகவும் இருக்க செய்கிறது. மேலும் இதில் டூயல் மைக்ரோபோன்கள் வழங்கப்பட்டு உள்ளன.
இத்துடன் 2.2 இன்ச் ஃப்ளிப் டச் ஸ்கிரீன், வாய்ஸ் கமான்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. ஆக்ஷன் பாட் IPX4 சான்று மற்றும் 1270 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கிறது. கோ 3 மாட்யுலும் IPX4 சான்று, 310 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கிறது. இதனை முழு சார்ஜ் செய்தால் 45 நிமிடங்கள் வரை பயன்படுத்த முடியும். ஆக்ஷன் பாட் உடன் சேர்க்கும் போது 170 நிமிடங்கள் வரை பயன்படுத்தலாம்.
இன்ஸ்டா360 கோ 3 ஆக்ஷன் கேமரா ஆன்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் சாதனங்களுடன் இணைந்து இயங்கும் திறன் கொண்டிருக்கிறது. வெள்ளை நிறத்தில் மட்டும் கிடைக்கும் இன்ஸ்டா360 கோ 3 மாடலின் 32 ஜிபி வெர்ஷன் விலை 380 டாலர்கள் என்றும் 64 ஜிபி மற்றும் 128 ஜிபி வெர்ஷன்களின் விலை முறையே 400 டாலர்கள் மற்றும் 430 டாலர்கள் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.