புதிய கேஜெட்டுகள்

ப்ளூடூத் காலிங் வசதியுடன் அறிமுகமான புது கிஸ்மோர் ஸ்மார்ட்வாட்ச்

Published On 2023-01-17 07:14 GMT   |   Update On 2023-01-17 07:14 GMT
  • கிஸ்மோர் பிராண்டின் புது ஸ்மார்ட்வாட்ச் முழு சார்ஜ் செய்தால் 15 நாட்களுக்கு பேட்டரி லைஃப் வழங்குகிறது.
  • புது ஸ்மார்ட்வாட்ச் IP67 சான்று, ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே, 450 நிட்ஸ் பிரைட்னஸ் கொண்டிருக்கிறது.

கிஸ்மோர் கிஸ்ஃபிட் பிலாஸ்மா ஸ்மார்ட்வாட்ச்-ஐ தொடர்ந்து கிஸ்மோர் பிராண்டின் புது மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய கிஸ்மோர் பிலேஸ் மேக்ஸ் என அழைக்கப்படும் புது ஸ்மார்ட்வாட்ச் 1.85 இன்ச் டிஸ்ப்ளே, 15 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் மற்றும் பல்வேறு அம்சங்களை கொண்டிருக்கிறது.

1.85 இன்ச் வளைந்த, IPS டிஸ்ப்ளே, அதிக ஸ்கிரீன் டு பாடி ரேஷியோ, 15 நாட்களுக்கு பேட்டரி லைஃப், ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே, 450 நிட்ஸ் பிரைட்னஸ், ஏராளமான உடல்நலன் மற்றும் ஃபிட்னஸ் டிராக்கிங் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் ஏராளமான ஸ்போர்ட்ஸ் மோட்கள் உள்ளன.

இந்த ஸ்மார்ட்வாட்ச்-இல் டிராக் செய்யப்படும் விவரங்கள் JYOU ப்ரோ ஹெல்த் சூட் உடன் இண்டகிரேட் செய்யப்படுகின்றன. கிஸ்மோர் பிலேஸ் மேக்ஸ் மாடலில் IP67 தர சான்று, ஸ்ப்லிட் ஸ்கிரீன் அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது.

கிஸ்மோர் பிலேஸ் மேக்ஸ் அம்சங்கள்:

1.85 இன்ச் IPS டிஸ்ப்ளே, 240x280 பிக்சல்

450 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே

ப்ளூடூத் காலிங் 5.0

ஏஐ வாய்ஸ் அசிஸ்டண்ட்

வாட்ச் ஃபேஸ்கள்

ஏராளமான ஸ்போர்ட்ஸ் மோட்கள்

IP67 வாட்டர் ரெசிஸ்டண்ட்

ஹெல்த் மாணிட்டரிங், SpO2, ஹார்ட் ரேட், பிரீதிங், ஸ்டிரெஸ் மற்றும் மென்ஸ்டுரல் டிராகிங்

இன்-பில்ட் கேம்ஸ், கால்குலேட்டர்

JYOU ப்ரோ ஆப் சப்போர்ட்

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

கிஸ்மோர் பிலேஸ் மேக்ஸ் ஸ்மார்ட்வாட்ச் பிளாக், பர்கண்டி மற்றும் கிரே என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1,199 ஆகும். இதன் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் கிஸ்மோர் வலைதளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

Tags:    

Similar News