புதிய கேஜெட்டுகள்

ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் அறிமுகமான புதிய இயர்பட்ஸ் - விலை இவ்வளவு தானா?

Published On 2023-09-10 05:00 GMT   |   Update On 2023-09-10 05:01 GMT
  • ஃபயர்-போல்ட் நிறுவனத்தின் புதிய இயர்பட்ஸ் 40 மணி நேர பிளேபேக் வழங்குகிறது.
  • அறிமுக சலுகையாக இந்த இயர்பட்ஸ் விலை குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

ஃபயர்-போல்ட் நிறுவனம் ஃபயர் பாட்ஸ் ஆரா இயர்பட்ஸ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. முன்னதாக ஜனவரி மாத வாக்கில் அறிமுகமான ஃபயர் பாட்ஸ் நின்ஜா 601 மாடல் வரிசையில், இந்த இயர்பட்ஸ் அறிமுகமாகி இருக்கிறது.

இன்-இயர் ரக டிசைன் கொண்டிருக்கும் புதிய இயர்பட்ஸ் 10 மில்லிமீட்டர் டைனமிக் டிரைவர்கள், 3டி சரவுண்ட் சவுண்ட் பேஸ் எஃபெக்ட்களை கொண்டிருக்கிறது. இந்த இயர்பட்ஸ்-இல் குவாட் மைக் ஏ.ஐ. இ.என்.சி. வசதி உள்ளது. இது அழைப்புகளின் போது வெளிப்புற சத்தத்தை தடுத்து நிறுத்தி, தெளிவான தகவல் பரிமாற்றத்திற்கு வழி வகுக்கிறது.

 

புதிய ஃபயர் பாட்ஸ் ஆரா மாடலில் உள்ள பேட்டரி முழு சார்ஜ் செய்தால் 40 மணி நேரத்திற்கு பேட்டரி பேக்கப் வழங்குகிறது. இத்துடன் இதில் உள்ள ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி காரணமாக இதனை பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 100 நிமிடங்களுக்கு பிளேபேக் பெற முடியும். இதில் யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.

இத்துடன் 40ms வரையிலான லோ-லேடன்சி கேமிங் மோட், ப்ளூடூத் 5.3, IPX4 தர ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. ஃபயர்-போல்ட் ஃபயர் பாட்ஸ் ஆரா இயர்பட்ஸ் புளூ, கிரீன், பிளாக், கிரே, பின்க், வைட் மற்றும் ஸ்கை புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

Tags:    

Similar News