புதிய கேஜெட்டுகள்

ரூ. 3 ஆயிரம் பட்ஜெட்டில் விற்பனைக்கு வந்த டிசோ ஸ்மார்ட்வாட்ச்

Published On 2022-11-30 08:06 GMT   |   Update On 2022-11-30 08:06 GMT
  • டிசோ பிராண்டின் புது ஸ்மார்ட்வாட்ச் மாடல் சமீபத்தில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
  • புதிய டிசோ ஸ்மார்ட்வாட்ச் 150-க்கும் அதிக வாட்ச் ஃபேஸ்கள் மற்றும் ப்ளூடூத் காலிங் வசதி கொண்டிருக்கிறது.

டிசோ பிராண்டு தனது டிசோ வாட்ச் ஆர் டாக் கோ ஸ்மார்ட்வாட்ச் மாடலை இம்மாத துவக்கத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்து இருந்தது. முன்னதாக இந்த ஸ்மார்ட்வாட்ச் சர்வதேச சந்தையிலும் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த மாடலின் இந்திய விற்பனை துவங்கி இருக்கிறது.

புதிய டிசோ வாட்ச் ஆர் டாக் கோ மாடலில் ப்ளூடூத் காலிங், 150-க்கும் மேற்பட்ட வாட்ச் ஃபேஸ்களை கொண்டிருக்கிறது. இதில் 110-க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோட்கள், ப்ளூடூத் 5.1 கனெக்டிவிட்டி போன்ற வசதிகள் உள்ளன. இத்துடன் 1.39 இன்ச் 360x360 பிக்சல் டிஸ்ப்ளே, 550 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளது. தோற்றத்தில் சாம்சங் கேலக்ஸி வாட்ச் போன்ற தோற்றம் கொண்டிருக்கும் டிசோ வாட்ச் ஆர் டாக் கோ மாடலின் பக்கவாட்டில் இரு பட்டன்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த வாட்ச் ரிம் அலுமினியம் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் 7H அளவு உறுதியான டெம்பர்டு கிளாஸ் வழங்கப்பட்டுள்ளது. ப்ளூடூத் 5.2 சார்ந்த ப்ளூடூத் காலிங் வசதி பில்ட்-இன் ஜிபிஎஸ், இதய துடிப்பு சென்சார்,ஸ SpO2 மாணிட்டரிங், மூட், ஸ்டிரெஸ், ஃபாடிக் மாணிட்டரிங், ஸ்லீப் டிராக்கிங், ஸ்டெப் மற்றும் கலோரி டிராக்கிங் மற்றும் ஏராளமான உடல் நல அம்சங்கள் உள்ளன.

டிசோ வாட்ச் ஆர் டாக் கோ மாடல் முழு சார்ஜ் செய்தால் பத்து நாட்கள் வரையிலான பேட்டரி பேக்கப் வழங்குகிறது. ப்ளூடூத் காலிங் பயன்படுத்தும் போது அதிகபட்சம் 9 நாட்களுக்கான பேக்கப் வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் முழுமையாக சார்ஜ் ஆக இரண்டு மணி நேரம் ஆகும். இத்துடன் கிளாசிக் பிளாக், தண்டர் புளூ மற்றும் சில்வர் வைட் என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது.

இந்திய சந்தையில் புதிய டிசோ வாட்ச் ஆர் டாக் கோ மாடலின் விலை ரூ. 3 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக நடைபெற்று வருகிறது. இந்த வாட்ச் வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது 5 சதவீதம் வரை கேஷ்பேக் பெறலாம்.

Tags:    

Similar News