தமிழ்நாடு

மன்னார்வளைகுடா பகுதியில் எல்லை தாண்டிய இலங்கை மீனவர்கள் 8 பேர் கைது

Published On 2023-10-24 06:11 GMT   |   Update On 2023-10-24 06:11 GMT
  • ரோந்து பணியில் ஈடுபட்ட கடலோர காவல் படையினர் மன்னார் வளைகுடாவின் குருசடை தீவு பகுதிக்கு சென்றனர்.
  • 4 பைபர் படகுகளில் இந்திய கடல் பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் 8 பேரை அவர்களின் படகுகளுடன் பிடித்தனர்.

மண்டபம்:

இலங்கையை சேர்ந்தவர்கள் தலைமன்னாரிலிருந்து கடல் வழியாக தங்கம் கடத்தி வருவதாக சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, ரோந்து பணியில் ஈடுபட்ட கடலோர காவல் படையினர் மன்னார் வளைகுடாவின் குருசடை தீவு பகுதிக்கு சென்றனர். அப்போது 4 பைபர் படகுகளில் இந்திய கடல் பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் 8 பேரை அவர்களின் படகுகளுடன் பிடித்தனர்.

அதே சமயம் மண்டபம் மரைக்காயர் பட்டினத்தை சேர்ந்த 4 பேர் பைபர் படகு ஒன்றில் மஞ்சள் மற்றும் கடல் அட்டைகளை இலங்கைக்கு கடத்தி செல்வது தெரியவந்தது. அவர்களையும் கடலில் அதிவேக ரோந்து படகில் சென்று விரட்டி பிடித்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்களுக்கு மண்டபத்தை சேர்ந்த மீனவர்கள் கடத்தல் பொருட்களை கொண்டு சென்றார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News