தமிழ்நாடு

பெரம்பூரில் ரூ.200 கோடி மோசடி- நிதி நிறுவன பெண் இயக்குனர்கள் 3 பேர் அதிரடி கைது

Published On 2023-04-18 10:00 GMT   |   Update On 2023-04-18 10:00 GMT
  • நிறுவனத்தில் முதலீடு செய்தால் 12 சதவீத வட்டியுடன் பணம் தருவதாக கவர்ச்சி அறிவிப்புகள் வெளியிட்டனர்.
  • நிதி நிறுவன வங்கி கணக்குகளை முடக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.

பெரம்பூர்:

பெரம்பூர் பாரதி சாலையில் பரஸ்பர சகாய நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது.

இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் 12 சதவீத வட்டியுடன் பணம் தருவதாக கவர்ச்சி அறிவிப்புகள் வெளியிட்டனர். இதனை நம்பி ஏராளமானோர் தாங்கள் சேமித்து வைத்திருந்த பணத்தை லட்சக்கணக்கில் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தனர். ஆனால் கூறியபடி நிதி நிறுவனம் பணத்தை கொடுக்கவில்லை என்று தெரிகிறது.

இதுகுறித்து பணத்தை இழந்தவர்கள் போலீசில் புகார் செய்தனர். இது தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் கூடுதல் பணம் தருவதாக பொதுமக்களின் முதலீடுகளை பெற்று ரூ.200 கோடி வரை மோசடி செய்து இருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து நிதி நிறுவன பெண் இயக்குனர்களான வசந்தி ஈஸ்வரப்பன், அவரது மகள் சக்தி ஐஸ்வர்யா, ராஜம்கண்ணன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

நிதி நிறுவன வங்கி கணக்குகளை முடக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.

Tags:    

Similar News