தமிழ்நாடு

சுபமுகூர்த்த நாள்: பத்திரப்பதிவு அலுவலகங்களில் 15 ஆயிரம் முன்பதிவு டோக்கன்கள்

Published On 2023-10-18 04:40 GMT   |   Update On 2023-10-18 04:40 GMT
  • அதிகளவில் பத்திரப்பதிவு நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு கூடுதலாக 150 டோக்கன்களும், தட்கல் முன்பதிவு டோக்கன்களும் வழங்கப்பட்டுள்ளது.
  • டோக்கன் வைத்திருப்பவர்களுக்கு இன்று இரவு எத்தனை மணி ஆனாலும் பதிவு செய்து கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை:

தமிழகத்தில் சுபமுகூர்த்த நாட்களில் அதிக அளவு பத்திரப்பதிவுகள் நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் இன்று ஐப்பசி மாதத்தின் முதல் சுபமுகூர்த்த தினம் என்பதால், பத்திரப்பதிவு அலுவலகங்களில் வழக்கத்துக்கு மாறாக பொதுமக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

இதை கருத்தில் கொண்டு ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்பட்டது. இரண்டு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களில் 200-க்கு பதில் 300 முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்பட்டிருந்தது.

அதிகளவில் பத்திரப்பதிவு நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு கூடுதலாக 150 டோக்கன்களும், தட்கல் முன்பதிவு டோக்கன்களும் வழங்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் இன்று அதிகளவு ஆவணங்களை பதிவு செய்வதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முழுவதும் பத்திரப்பதிவு அலுவலகங்களில் மொத்தம் 15 ஆயிரம் டோக்கன்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். டோக்கன் வைத்திருப்பவர்களுக்கு இன்று இரவு எத்தனை மணி ஆனாலும் பதிவு செய்து கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அரசுக்கு இன்று ஒரு நாளில் மட்டும் ரூ.100 கோடி வரை வருமானம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News