தமிழ்நாடு செய்திகள்

அனுசியா குடும்பத்தினரை மார்க்சிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் சந்தித்து ஆறுதல் கூறிய காட்சி. 

சாதிய ஆணவ படுகொலைகளை தடுக்க தமிழக அரசு தனிச் சட்டம் இயற்ற வேண்டும்- பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

Published On 2023-04-20 17:38 IST   |   Update On 2023-04-20 17:38:00 IST
  • இளம் பெண் அனுசுயாவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நேரில் சந்தித்தார்.
  • சாதிய ஆதிக்க ஆணவ படுகொலைகளுக்கு எதிராக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருமித்த குரல் கொடுக்க வேண்டும்.

சேலம்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே அருணபதி கிராமத்தில் நிகழ்ந்த ஆணவ படுகொலை சம்பவத்தில் படுகாயம் அடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இளம் பெண் அனுசுயாவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நேரில் சந்தித்தார்.

தொடர்ந்து அனுசுயாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் சாதிய ஆணவ படுகொலைகளை தடுக்க தனி சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அருணபதி கிராமத்தில் நடந்த கொடூர சம்பவம் தொடர்பாக தண்டபாணி மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆணவ படுகொலை விவகாரங்களில் சாதிய பின்னணியில் இருப்பவர்களை கண்டறிந்து அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் தொடரும் இதுபோன்ற சாதிய ஆதிக்க ஆணவ படுகொலைகளுக்கு எதிராக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருமித்த குரல் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News