தமிழ்நாடு

கனல் கண்ணன்

பெரியார் பற்றிய அவதூறு பேச்சு- கனல் கண்ணன் கைது

Update: 2022-08-15 07:57 GMT
  • கனல் கண்ணன் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
  • சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைத்து கனல் கண்ணனிடம் விசாரணை நடத்தி போலீசார் வாக்குமூலம் பதிவு செய்கிறார்கள்.

சென்னை:

சென்னையில் நடைபெற்ற இந்து முன்னணி கூட்டத்தில் திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன், பெரியார் பற்றி அவதூறாக பேசி இருந்தார்.

இதையடுத்து கனல் கண்ணன் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கனல் கண்ணனை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து அவர் தலைமறைவானார். சென்னை ஐகோர்ட்டில் முன் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு தள்ளுபடியானது. இந்தநிலையில் புதுவையில் வைத்து கனல் கண்ணனை போலீசார் இன்று கைது செய்தனர்.

கனல் கண்ணனை போலீசார் சென்னைக்கு அழைத்து வருகிறார்கள். விசாரணைக்கு பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளார். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைத்து கனல் கண்ணனிடம் விசாரணை நடத்தி போலீசார் வாக்குமூலம் பதிவு செய்கிறார்கள்.

Tags:    

Similar News