தமிழ்நாடு செய்திகள்
ரங்கசாமி

பழைய துறைமுக வளாகத்தில் ஒமைக்ரான் சிறப்பு வார்டு- ரங்கசாமி ஆய்வு

Published On 2022-01-03 15:51 IST   |   Update On 2022-01-03 16:06:00 IST
ஒமைக்ரானுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் 400 படுக்கை வசதிகள் அமைக்க முடியுமா? என முதல்-அமைச்சர் ரங்கசாமி பழைய துறைமுக வளாகத்தில் உள்ள குடோன்களை ஆய்வு செய்தார்.
புதுச்சேரி:

நாடு முழுவதும் ஒமைக்ரான் பரவி வருகிறது. ஒமைக்ரான் பரவலை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதே நேரத்தில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனியாக வார்டுகளை உருவாக்கவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கவர்னர் தமிழிசை ரோடியர் மில் வளாகத்தை பார்வையிட்டார். அங்கு படுக்கை வசதி செய்ய முடியுமா? என ஆய்வு செய்தார்.

இந்த நிலையில் இன்று முதல்-அமைச்சர் ரங்கசாமி பழைய துறைமுக வளாகத்தில் உள்ள குடோன்களை ஆய்வு செய்தார். அங்குள்ள குடோன்கள் ஏற்கனவே சீரமைக்கப்பட்டு வருகிறது. அங்கு ஒமைக்ரானுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் 400 படுக்கை வசதிகள் அமைக்க முடியுமா? என ஆய்வு செய்தார்.

ஒமைக்ரான் சிறப்பு வார்டு பழைய துறைமுக வளாகத்தில் அமைக்கப்படும் என தெரிகிறது.


Similar News