செய்திகள்
கவர்னர் கிரண்பேடி

இது கொரோனா அல்ல... கர்மா- கவர்னர் கிரண்பேடி கருத்து

Published On 2020-03-20 03:04 GMT   |   Update On 2020-03-20 03:32 GMT
கூண்டில் மனிதர்கள் முகக்கவசம் அணிந்தபடி இருக்க, விலங்குகள் வெளியே சுதந்திரமாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, ‘இது கொரோனா அல்ல. இது கர்மா’ என்று புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி கொரோனா பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்குதலில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரியில் மக்கள் கூடும் இடங்கள் மூடப்பட்டுள்ளன. மக்கள் இதில் இருந்து காத்துக்கொள்ள வழிதேடி வருகின்றனர். இச்சூழலில் புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி கொரோனா பற்றி சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.



கூண்டில் மனிதர்கள் முகக்கவசம் அணிந்தபடி இருக்க, விலங்குகள் வெளியே சுதந்திரமாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதன் கீழே ‘இது கொரோனா அல்ல. இது கர்மா’ என்ற வாசகத்தை எழுதியுள்ளார்.

அதைத்தொடர்ந்து அவர் தெரிவித்துள்ள கருத்துகளில், நாம் யாரை உட்கொள்கிறோம் என்ற பொறுப்பை எவ்வாறு ஏற்பது? இது பாதிப்பில்லா தேர்வை பற்றியதுதான். அத்துடன் அகிம்சையை பயிற்சி செய்வது வார்த்தையில் மட்டுமில்லாமல் செயலிலும் உணவிலும்தான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கவர்னர் கிரண்பேடியின் இந்த பதிவு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து தனது டுவிட் குறித்து விளக்கம் அளித்துள்ள அவர் வாட்ஸ்அப் மூலம் இந்த தகவல் வந்ததாக தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News