விளையாட்டு

தெற்காசிய தடகள போட்டி: மேலும் 8 தங்கம்- முதல் இடம் பிடித்து இந்தியா அசத்தல்

Published On 2025-10-27 14:00 IST   |   Update On 2025-10-27 14:00:00 IST
  • போட்டியின் முடிவில் இந்தியா 20 தங்கம், 20 வெள்ளி, 18 வெண்கலம் ஆக மொத்தம் 58 பதக்கங்களை பெற்று முதல் இடத்தை பிடித்தது.
  • நேபாளத்துக்கு 6 பதக்கமும், வங்கதேசத்துக்கு 3 பதக்கமும், மலேசியாவுக்கு 1 பதக்கமும் கிடைத்தன.

ராஞ்சி:

4-வது தெற்காசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் கடந்த 24-ந்தேதி தொடங்கியது. நேற்றுடன் இந்தப் போட்டிகள் முடிவடைந்தன. கடைசி நாளில் இந்தியாவுக்கு மேலும் 8 தங்கம் கிடைத்தது.

ஆண்களுக்கான சங்கிலி குண்டு எறிதல், 400 மீட்டர் ஓட்டம், 10 ஆயிரம் மீட்டர் ஓட்டம், 200 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், பெண்களுக்கான உயரம் தாண்டுதல், 800 மீட்டர் ஓட்டம் ஆகியவற்றில் தங்கம் கிடைத்தது.

400 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டத்தில் தமிழக வீராங்கனை ஒலிம்பா ஸ்டெபி 1 நிமிடம் 00.21 வினாடியில் கடந்து வெண்கல பதக்கம் பெற்றார். அவர் ஏற்கனவே 2 பதக்கம் பெற்று இருந்தார்.

போட்டியின் முடிவில் இந்தியா 20 தங்கம், 20 வெள்ளி, 18 வெண்கலம் ஆக மொத்தம் 58 பதக்கங்களை பெற்று முதல் இடத்தை பிடித்தது. இலங்கை 16 தங்கம், 14 வெள்ளி, 10 வெண்கலம் ஆக மொத்தம் 40 பதக்கத்துடன் 2-வது இடத்தை பிடித்தது.

நேபாளத்துக்கு 6 பதக்கமும், வங்கதேசத்துக்கு 3 பதக்கமும், மலேசியாவுக்கு 1 பதக்கமும் கிடைத்தன.

Tags:    

Similar News