விளையாட்டு

PKL 2025 பெங்களூரு புல்ஸ் அணியை 7 புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தபாங் டெல்லி கே.சி.

Published On 2025-09-02 21:41 IST   |   Update On 2025-09-02 21:41:00 IST
  • தபாங் டெல்லி கேப்டன் அஷு மாலிக் 15 புள்ளிகள் பெற்றார்.
  • நீரஜ் நன்வால் 7 புள்ளிகள் பெற்றார்.

புரோ கபடி 2025 சீசனின் முதல் வார போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற முதல் போட்டியில் தபாங் டெல்லி கே.சி.- பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின. இதில் தபாங் டெல்லி கே.சி. 41-34 என வெற்றி பெற்றது.

தபாங்க் டெல்லி அணியின் கேப்டன் அஷு மாலிக் 15 புள்ளிகள் பெற்றார். நீரஜ் நன்வால் 7 புள்ளிகளும், சுர்ஜீத் சிங், சவுரவ் நந்தல், பசேல் அட்ராசலி ஆகியோர் தலா 3 புள்ளிகளும் பெற்றனர்.

பெங்களூரு புல்ஸ் அணி சார்பில் அலிரேசா மிர்சையான் 10 புள்ளிகளும், கணேசா 4 புள்ளிகளும் பெற்றனர். ஆகாஷ் ஷிண்டே 3 புள்ளிகள் பெற்றார்.

Tags:    

Similar News