விளையாட்டு
நடஷா மோர்லஸ் சாண்டோஸ்
பார்வைதிறன் குறைந்த போர்ட்டோரிகோ வீராங்கனை- பிரெய்லி போர்டில் ஆடுகிறார்
- 24 வயதான அவருக்கு இடது கண் பார்வை இல்லை.
- நான் விளையாடுவது எங்கள் நாட்டில் பலருக்கு உத்வேகமாக உள்ளது.
போர்ட்டோரிகோ நாட்டை சேர்ந்த நடஷா மோர்லஸ் சாண்டோஸ் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்று விளையாடி வருகிறார். 24 வயதான அவருக்கு இடது கண் பார்வை இல்லை. வலது கண்ணிலும் மிகக்குறைந்த பார்வை திறனே இருக்கிறது. ஆனாலும் நடாஷா செஸ்சில் சாதித்து வருகிறார். பிரெய்லி போர்டில் அவர் ஆடி வருகிறார். முதல் ரவுண்டில் அமெரிக்காவிடம் தோற்றார். 2-வது சுற்றில் வெற்றிபெற்றார். இது தொடர்பாக நடாஷா கூறியதாவது:-
12 வயதில் செஸ் விளையாட தொடங்கினேன். நான் பிரெய்லி டிஜிட்டல் போர்டில் ஆடினால் அதை அடிப்படையாக வைத்து உதவியாளர் வழக்கமான முறையில் ஆடுவார். நான் விளையாடுவது எங்கள் நாட்டில் பலருக்கு உத்வேகமாக உள்ளது. எப்போதும் நேர்மறையான சிந்தனைகளை பின்பற்றுவேன். இவ்வாறு அவர் கூறினார்.