இந்தியா
null
- மத்திய அரசை கபில் சிபல் எம்.பி. கடுமையாக விமர்சித்து உள்ளார்.
- மனசாட்சி இல்லாமல் ராகுல் காந்தியை அரசு பங்களாவை விட்டு வெளியேற சொல்லி உள்ளனர்.
புதுடெல்லி:
ராகுல் காந்தி எம்.பி. பதவியை இழந்ததை தொடர்ந்து அவர் ஏப்ரல் மாதம் 22-ந்தேதிக்குள் அரசு பங்களாவை காலி செய்யுமாறு மக்களவையின் வீட்டு வசதி குழு நோட்டீசு அனுப்பி உள்ளது.
இதையடுத்து மத்திய அரசை கபில் சிபல் எம்.பி. கடுமையாக விமர்சித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் மனசாட்சி இல்லாமல் ராகுல் காந்தியை அரசு பங்களாவை விட்டு வெளியேற சொல்லி உள்ளனர். இது சிறிய மனிதர்களின் அற்ப அரசியல் என விமர்சனம் செய்து உள்ளார். கடந்த ஆண்டு மே மாதம் காங்கிரஸ் மேலிடம் மீதான அதிருப்தியால் அக்கட்சியில் இருந்து விலகி கபில் சிபல் தனியாக அமைப்பை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.