இந்தியா

ராஜஸ்தானில் வினோதம்- கைக்குட்டையில் திருமண அழைப்பிதழ்

Published On 2025-11-15 10:44 IST   |   Update On 2025-11-15 10:44:00 IST
  • கைக்குட்டையில் மகனின் திருமண அழைப்பிதழ் அச்சிட முடிவு செய்தனர்.
  • சாலையோரம் வீசப்பட்டுள்ள சாமி படங்களை சிலர் மிதித்து செல்வதை கண்டு அதேபோல் தாங்களும் செய்யக்கூடாது என முடிவு செய்தோம்.

ராஜஸ்தான் மாநிலம் போர்கேடா அடுத்த அகூர்தாம் காலனியை சேர்ந்தவர் மகேஷ் ரானேவால். இவரது மனைவி மம்தா. இவர்களது மகனுக்கு அடுத்த வாரம் திருமணம் நடைபெற உள்ளது.

மகனின் திருமண அழைப்பிதழை புதுமையான முறையில் அச்சிட தம்பதியினர் முடிவு செய்தனர். அதன்படி சமூக ஊடகங்களில் திருமண அழைப்பிதழ் தேடிப் பார்த்தனர்.

அதில் கைக்குட்டையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன.

இதேபோல் கைக்குட்டையில் தனது மகனின் திருமண அழைப்பிதழ் அச்சிட முடிவு செய்தனர்.

உள்ளூர் அச்சக உரிமையாளர் ஒருவர் உதவியுடன் திருமண அழைப்பிதழ்களை அச்சிட்டு உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டவர்களுக்கு கொடுத்தனர்.

கைக்குட்டையில் திருமண அழைப்பிதழ் அச்சிடப்பட்டு இருந்ததைக் கண்டவர்கள் மகேஷ், மம்தா தம்பதியை வெகுவாக பாராட்டினர்.

காகித அட்டைகளில் சாமி படத்துடன் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ்கள் சாலையோரங்களில் வீசி விட்டு செல்கின்றனர்.

சாலையோரம் வீசப்பட்டுள்ள சாமி படங்களை சிலர் மிதித்து செல்வதை கண்டு அதேபோல் தாங்களும் செய்யக்கூடாது என முடிவு செய்தோம்.

நாங்கள் கொடுக்கும் அழைப்பிதழை அனைவரும் பயன்படுத்தும் வகையில் கைக்குட்டையில் அழைப்பிதழ் அடித்து கொடுத்து வருகிறோம் என்றனர்.

Tags:    

Similar News