உள்ளூர் செய்திகள்

கொள்ளையர்கள் விட்டுச் சென்ற புல்லட்டை படத்தில் காணலாம்.

பரமத்திவேலூர் அருகே பரபரப்பு வீட்டில் புகுந்து பணம், நகை கொள்ளை

Published On 2023-08-12 07:06 GMT   |   Update On 2023-08-12 07:06 GMT
  • காளியண்ணன் வேலைக்கு சென்று விட்டு மதியம் 3.45 மணியளவில் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டிற்குள் இருந்து 2 மர்ம நபர்கள் வெளியில் வந்துள்ளனர்.
  • இதையடுத்து தப்பிச் சென்ற இருவரும் அந்த புல்லட்டில் ஏறினர். பின்னர் புல்லட்டை ஸ்டார்ட் செய்தபோது அது ஸ்டார்ட் ஆகவில்லை. இதனால் 3 பேரும் புல்லட்டை தள்ளிக்கொண்டு ஓடினர்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே சாலப்பாளையம் வி.ஐ.பி. கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் மணி (59). இவர் ரிக் வண்டி தொழில் செய்து வருகிறார்.

100 நாள் வேலை

இவரது தந்தை காளி யண்ணன், தாயார் நல்லம்மாள் ஆகியோர் பரமத்திவேலூர் அருகே கோதூர் பகுதியில் உள்ள அக்ரஹாரத்தில் வசித்து வருகின்றனர். காளியண்ணன் 100 நாள் வேலைக்கு சென்று வருகிறார்.

இந்நிலையில் நேற்று மணியின் தாயார் நல்லம்மாள் அருகிலுள்ள தோட்டத்திற்கு வீட்டை பூட்டாமல் வெளி தாழ்ப்பாள் மட்டும் போட்டு விட்டு சென்று விட்டார்.

2 மர்மநபர்கள்

காளியண்ணன் வேலைக்கு சென்று விட்டு மதியம் 3.45 மணியளவில் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டிற்குள் இருந்து 2 மர்ம நபர்கள் வெளியில் வந்துள்ளனர். அதைப் பார்த்த காளியண்ணன் சத்தம் போட்டுள்ளார்.

புல்லட்

இதை பார்த் இருவரும் சுற்றுச்சுவரை ஏறி குதித்தனர். அங்கு மற்றொருவர் பதி வெண் இல்லாத புல்லட்டுடன் தயாராக இருந்தார்.

இதையடுத்து தப்பிச் சென்ற இருவரும் அந்த புல்லட்டில் ஏறினர். பின்னர் புல்லட்டை ஸ்டார்ட் செய்தபோது அது ஸ்டார்ட் ஆகவில்லை. இதனால் 3 பேரும் புல்லட்டை தள்ளிக்கொண்டு ஓடினர்.

இவர்களுக்கு பின்னால் காளியண்ணனும் துரத்திச் சென்றார். இதனிடையே மூட்டு அறுவை சிகிச்சை செய்திருந்ததால் காளியண்ணனால் வேகமாக ஓட முடியவில்லை. இத னால் சிறிது தூரம் ஓடிய காளியண்ணன், திருடன் திருடன் என்று சத்தம் போட்டு உள்ளார்.

தப்பியோட்டம்

இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பொதுமக்கள் ஓடி வருவதை பார்த்த 3 வாலிபர்களும் புல்லட்டை அங்கேயே விட்டுவிட்டு ஓட்டம் பிடித்தனர். மர்மநபர்களை பொதுமக்களும் துரத்தி சென்றனர். ஆனால் அவர்கள் கண் இமைக்கும் நேரத்தில் மறைந்து விட்டனர்.

5 பவுன் நகை

இதை தொடர்ந்து காளியண்ணனும், அவரது மனைவி நல்லம்மாளும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் டேபிள் டிராயரில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம், 5 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது. இது குறித்து காளியண்ணன் அவரது மகன் மணிக்கு தகவல் அளித்தார்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மணி இதுகுறித்து நல்லூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் நல்லூர் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் பெருமாள் வழக்கு பதிவு செய்து பணம் மற்றும் நகைகளை திருடிக்கொண்டு புல்லட்டை விட்டு விட்டு தப்பி ஓடிய மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News