செய்திகள்
வேளாண் சட்டங்களை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி கடைவீதியில் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து முற்போக்கு சிந்தனையாளர் இயக்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி கடைவீதியில் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து முற்போக்கு சிந்தனையாளர் இயக்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கிளை தலைவர் சிவசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். ஆலோசகர் பாலகிருஷ்ணன், இணைச்செயலாளர் தர்மலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாநிலத் தலைவர் பாலசுப்பிரமணியன், துணை தலைவர் வீராசாமி, மாவட்ட தலைவர் பாண்டியன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினார்கள்.
ஆர்ப்பாட்டத்தின் போது, விவசாயிகள் உற்பத்தி செய்யும் எந்த பொருளுக்கும் கட்டுப்படியான விலை கிடைப்பதில்லை. விவசாயிகள் வாங்கும் அனைத்து பொருட்களின் விலையும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக விவசாயிகளின் நலன்களுக்கு எதிராக 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இச்சட்டங்களால் விவசாயமும், விவசாயிகளும் மேலும் மோசமான சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள், என்று தெரிவிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ராமலிங்கம், ஒன்றிய தலைவர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.