செய்திகள்
அரியலூரில் கட்டுமானத்துறை பொறியாளர்கள் ஆர்ப்பாட்டம்

அரியலூரில் கட்டுமானத்துறை பொறியாளர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2021-10-27 16:55 IST   |   Update On 2021-10-27 16:55:00 IST
அரியலூர் அண்ணா சிலை அருகில் கட்டுமானத்துறை பொறியாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
அரியலூர்:

அரியலூர் அண்ணா சிலை அருகில் கட்டுமானத்துறை பொறியாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். சிமெண்டு விலை மற்ற மாநிலங்களை விட அதிகமாக விற்பதை தடை செய்ய வேண்டும். மணல் எடுப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும். 

தினமும் அதிகரித்து வரும் இரும்பு கம்பி, செங்கல் மற்றும் கட்டுமான பொருட்கள் விலை உயர்வால் கட்டுமான தொழில் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து விலை உயர்வை கட்டுக்குள் வைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பின்னர் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

Similar News