செய்திகள்
முககவசம்

மாமல்லபுரத்தில் முககவசம் அணியாத சுற்றுலா பயணிகள் 50 பேருக்கு அபராதம்

Published On 2021-07-27 12:43 GMT   |   Update On 2021-07-27 12:43 GMT
மாமல்லபுரத்தில் முககவசம் அணியாத சுற்றுலா பயணிகள் 50 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
மாமல்லபுரம்:

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் கொரோனா 3-வது அலை பரவாமல் தடுக்கும் வகையில் மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் உத்தரவின்பேரில், பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அரசின் வழிகாட்டி நெறிமுறைகள் கடுமையாக பின்பற்றப்படுகின்றன.

இந்நிலையில் மாமல்லபுரம் கடற்கரை கோவில் புராதன சின்னங்களை கண்டுகளிக்க வந்த சுற்றுலா பயணிகள் பலர் முககவசம் அணியவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து கடற்ரை கோவில் நுழைவு வாயின் பகுதியில் முககவசம் அணியாமல் வந்த 50 சுற்றுலா பயணிகளை மடக்கிய மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாக இயக்குனர் வி.கணேஷ், சுகாதார ஆய்வாளர் ரகுபதி, சுகாதார மேற்பார்வையாளர் தாமோதரன் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் பயணிகள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.200 அபராதம் விதித்தனர். பிறகு பேரூராட்சி சார்பில் அபராதம் விதிக்கப்பட்டவர்களுக்கு முககவசம் வழங்கிய அவர்கள் அதனை அணிந்து பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடித்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.
Tags:    

Similar News