செய்திகள்
தீவிபத்து ஏற்பட்ட தீப்பெட்டி ஆலையை காணலாம்.

தீப்பெட்டி ஆலையில் திடீர் தீ விபத்து

Published On 2021-06-15 08:45 IST   |   Update On 2021-06-15 08:45:00 IST
தீப்பெட்டி மற்றும் பட்டாசு ஆலை தனி தாசில்தார் சிவஜோதி சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்.
சிவகாசி:

சிவகாசி-நாரணாபுரம் ரோட்டில் உள்ள முருகன் காலனியில் மணி என்பவருக்கு சொந்தமான தீப்பெட்டி ஆலை இயங்கி வருகிறது. இங்கு எந்திரம் மூலம் தீப்பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வந்தது. வழக்கம்போல் நேற்று காலை தீக்குச்சி உற்பத்தி செய்யும் பணிகள் நடைபெற்றன. இந்த நிலையில் மதியம் 1.30 மணி அளவில் தீக்குச்சி உற்பத்தி நடைபெற்று வந்த எந்திரத்தில் உராய்வின் காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதில் அந்த எந்திரம் எரிந்து சேதமானது. இதுகுறித்து தகவல் அறிந்து சிவகாசி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் தடுத்தனர். தீப்பெட்டி மற்றும் பட்டாசு ஆலை தனி தாசில்தார் சிவஜோதியும் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்.

Similar News