செய்திகள்
கோப்புபடம்

புதுவையில் தளர்வுகளுடன் ஊரடங்கு 7-ந் தேதி வரை நீட்டிப்பு - ஒர்க்ஷாப் திறக்க அனுமதி

Published On 2021-05-30 17:44 IST   |   Update On 2021-05-30 17:44:00 IST
புதுவையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 7-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவை கவர்னர் பிறப்பித்துள்ளார்.

புதுச்சேரி:

புதுவையில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவியதை தொடர்ந்து ஏப்ரல் 26-ந் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது.

காய்கறி, மளிகை, இறைச்சி உட்பட அத்தியாவசிய கடைகள் மட்டும் காலை 6 முதல் மதியம் 12 வரை திறக்க அனுமதிக்கப்பட்டது.

தமிழகத்தில் கடந்த 11-ந் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் புதுவையிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என்ற நிலை ஏற்பட்டது.

புதுவை அரசு தொடர்ந்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து வந்தது. தற்போது தமிழகத்தில் ஜூன் 7-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதுவையில் கவர்னர் தமிழிசை தலைமையில் கொரோனா மேலாண்மை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் ஊரடங்கை நீட்டிக்க வலியுறுத்தப்பட்டது.

இதனையடுத்து புதுவையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 7-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவை கவர்னர் பிறப்பித்துள்ளார்.

இந்த ஊரடங்கில் மின்சாரம், குடிநீர் குழாய், நீர் சுத்திகரிப்பு, மோட்டார் பழுதுநீக்குதல் (ஒர்க்ஷாப்) போன்ற அடிப்படை தேவைகளை சுய தொழிலாக செய்பவர்களுக்கு கட்டுப்பாட்டில் இருந்து விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Similar News