செய்திகள்
முக கவசம் அணியாமல் காய்கறி வாங்க குவிந்த மக்கள்.

செங்கல்பட்டு காய்கறி மார்க்கெட்டில் அரசு உத்தரவை காற்றில் பறக்க விட்ட வியாபாரிகள், பொதுமக்கள்

Published On 2021-04-25 17:32 IST   |   Update On 2021-04-25 17:32:00 IST
செங்கல்பட்டு காய்கறி மார்க்கெட்டில் பெரும்பாலோனோர் முக கவசம் அணியாமல் காய்கறி வாங்க குவிந்துள்ளனர். கடும் நடவடிக்கை எடுக்ககோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு:

கொரோனா தொற்று அதிகரிப்பால் தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாநிலம் முழுவதும் தளர்வில்லா முழு ஊரடங்கை கடைபிடிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. இதனால் நேற்று செங்கல்பட்டு காய்கறி மார்க்கெட்டுகளில் ஏராளமான பொதுமக்கள் ஒன்று கூடினர்.

பெரும்பாலோனோர் முக கவசம் அணியாமல் காய்கறி வாங்க குவிந்தனர். அதுபோல காய்கறிகளை விற்பனை செய்யும் வியபாரிகளிலும் ஏராளமானோர் முககவசம் அணியாமல் இருந்தனர். விற்பனையாளர்களும், பொதுமக்களும் முககவசம் அணியாமலும். சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்டபடி நடந்துகொண்டனர். 

இந்த கொரோனா தொற்று மேலும் பரவாமலிருக்க செங்கல்பட்டு நகராட்சி கடும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Similar News