செய்திகள்
விபத்துக்கு காரணமான லாரி டிரைவர், உரிமையாளரை கைது செய்யக்கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

செய்யூர் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலி- கிராம மக்கள் மறியல்

Published On 2021-04-17 12:52 GMT   |   Update On 2021-04-17 12:52 GMT
செய்யூர் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலியானார். இதையடுத்து கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுராந்தகம்:

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த மேற்கு செய்யூரை சேர்ந்தவர் லட்சுமி (வயது 40). கணவரை இழந்தவர். இவருக்கு 2 மகனும் ஒரு மகளும் உள்ளனர். நேற்று காலை நரேஷ் குமார் (17) தனது தாயை மோட்டார் சைக்கிளில் அழைத்து கொண்டு செய்யூர் ஆஸ்பத்திரிக்கு சென்றார். செய்யூர் பஸ் நிலையத்தை அடுத்த அரசினர் மேல்நிலைப்பள்ளி அருகே செல்லும்போது இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியது. இதில் லாரி சக்கரத்தில் சிக்கிய லட்சுமி பரிதாபமாக இறந்தார். இவரது உடல் இழுத்து செல்லப்பட்டது. உடல் 2 துண்டானது.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த அந்த பகுதி பொதுமக்கள் விபத்தை ஏற்படுத்திய லாரி கண்ணாடிகளை உடைத்து லாரி உரிமையாளர், டிரைவர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாலையின் குறுக்கே அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த செய்யூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னதுரை சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

செய்யூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அவரது உடலை மீட்டு மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். லாரி டிரைவரான வயலூரை சேர்ந்த உத்தமன் என்பவரை போலீசார் கைது செய்து மேலும் விசாரித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News