செய்திகள்
காரில் இருந்தபடி கவர்னர் கிரண்பேடி ஆய்வு மேற்கொண்டபோது எடுத்த படம்.

முககவசம் அணிவதில் முன்னேற்றத்தை காண முடிகிறது- கவர்னர் சொல்கிறார்

Published On 2020-07-11 06:15 GMT   |   Update On 2020-07-11 06:15 GMT
புதுச்சேரியில் முககவசம் அணிவதில் முன்னேற்றத்தை காண முடிகிறது. சமூக இடைவெளியை கடைப்பிடிக்க மேலும் உழைக்க வேண்டுமென கவர்னர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:

புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி நேற்று மாலை கவர்னர் மாளிகையில் இருந்து புறப்பட்டு முத்தியால்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு பணியில் இருந்த மருத்துவர்களிடம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் நோயாளிகள் அரசின் விதிமுறைகளை பின்பற்றுகிறார்களா? எனவும் கேட்டறிந்தார்.

பின்னர் டாக்டர்களிடம் நோயாளிகள் கண்டிப்பாக முககவசம் அணிந்து வரவேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டுமென்று அறிவுறுத்தினார். இதேபோல் கொசப்பாளையம், ரெட்டியார்பாளையம் பகுதியிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட அவர் காமராஜர் சாலை, அண்ணா சாலை, நேரு வீதியை தனது காரில் இருந்தபடியே பார்வையிட்டார்.

இதுகுறித்து கவர்னர் கிரண்பேடி சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தற்பொழுது முககவசம் அணிவதில் முன்னேற்றத்தை காண முடிகிறது. சமூக இடைவெளி கடைபிடிபிடிபதில் இன்னும் முன்னேற்றம் தேவைப்படுகிறது. ஒருவரை அடுத்து ஒருவர் வாங்கும் பழக்கம் இன்னும் ஏற்படவில்லை. இதை அமலாக்க இன்னும் உழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News