செய்திகள்
கொரோனா பரிசோதனை முகாம்

அரியாங்குப்பத்தில் கொரோனா பரிசோதனை முகாம்- பொதுமக்கள் ஆர்வம்

Published On 2020-07-10 07:14 GMT   |   Update On 2020-07-10 07:14 GMT
அரியாங்குப்பத்தில் கொரோனா பரிசோதனை முகாமில் பரிசோதனை செய்து கொள்வதற்காக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
அரியாங்குப்பம்:

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க அரசும், மாவட்ட நிர்வாகமும் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கிராமப்புற மக்களுக்கு நடமாடும் வாகனம் மூலம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி அரியாங்குப்பம் காமராஜர் திருமண மண்டபத்தில் நேற்று கொரோனா தொற்று கண்டறியும் முகாம் நடைபெற்றது.

முகாமை ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ., தொடங்கிவைத்தார். சுகாதார துறை இணை இயக்குனர் ரகுநாதன் மேற்பார்வையில் அரியாங்குப்பம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி தாரணி தலைமையிலான மருத்துவ குழுவினர் கொரோனா பரிசோதனை செய்தனர். இதில் போலீசார், அரசு ஊழியர்கள், சுகாதார பணியாளர்கள் என 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். அவர்களின் உமிழ்நீர் சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

முகாமை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் திடீரென்று ஆய்வு செய்து, சுகாதாரத்துறையினருக்கு ஆலோசனைகள் கூறினார். இந்த முகாமில் கொரோனா பரிசோதனை செய்து கொள்வதற்காக காலை 8.30 மணி முதல் பொதுமக்கள் வர தொடங்கினார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். அவர்கள் சமூக இடைவெளியில் உட்கார வைத்து, பரிசோதனை செய்யப்பட்டது.
Tags:    

Similar News