செய்திகள்
கட்டுப்பாட்டு பகுதி

புதுச்சேரியில் மேலும் 27 கட்டுப்பாட்டு மண்டலம்

Published On 2020-07-10 07:04 GMT   |   Update On 2020-07-10 09:57 GMT
புதுவையில் மேலும் 27 இடங்கள் கட்டுப்பாட்டு மண்டலமாக கலெக்டர் அருண் அறிவித்துள்ளார்.
புதுச்சேரி:

புதுச்சேரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் வசித்து வந்த பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்படுகிறது.

அதன்படி 1.லாஸ்பேட்டை மாகவீர் நகர் 2-வது முதன்மை சாலை, 2.தர்மாபுரி தனகோடி நகர் அப்துல்கலாம் வீதி, 3.சண்முகாபுரம் வி.வி.சிங் நகர், பாரதிதாசன் வீதி, 4.தட்டாஞ்சாவடி வீமன் நகர் மேட்டுத்தெரு, 5.கதிர்காமம் ராதாகிருஷ்ணன் நகர் விநாயகர் கோவில் வீதி, 6. தட்டாஞ்சாவடி ஜி.டி. நகர் முதல் குறுக்குத்தெரு, 7.சாரம் காமராஜ் நகர் மொட்டைத்தோப்பு அண்ணாமலை நகர், 8.சாரம் சின்னையன்பேட்டை விநாயகமுருகன் நகர் 2-வது குறுக்குத்தெரு, 9.முத்தியால்பேட்டை வசந்த் நகர் வைகை வீதி, 10.சாமிபிள்ளைத்தோட்டம் தமிழ்ஒளி வீதி, 11.சாமிபிள்ளைத்தோட்டம் 8-வது குறுக்குத்தெரு, 12.மேட்டுப்பாளையம் வழுதாவூர்சாலை, 13.வெங்கட்டா நகர் 5-வது குறுக்குத்தெரு, 14.சண்முகாபுரம் மாணிக்கசெட்டியார் நகர் நெசவாளர் குடியிருப்பு, 15.குயவர்பாளையம் வாணிதாசன் வீதி,

16.கருவடிக்குப்பம் சாமிபிள்ளை கோவில் வீதி. 17.சாரம் வாணிதாசன் நகர், 18.குருசுக்குப்பம் பத்மினி நகர் பிள்ளையார்கோவில் வீதி, 19.முத்திரையர்பாளையம் சக்தி நகர். 20.சண்முகாபுரம் வழுதாவூர் சாலை, 21.லாஸ்பேட்டை லட்சுமி நகர், 22.பாகூர் நேரு வீதி, 23.புதுவை சின்னமணிக்கூண்டு மிலாது வீதி, 24.அய்யங்குட்டிப்பாளையம் மாரியம்மன் கோவில் வீதி, 25.சாமிபிள்ளைத்தோட்டம் தவமணி நகர் 3-வது குறுக்குத்தெரு, 26.கோர்காடு புதுநகர், 27.முதலியார்பேட்டை ஜெயமூர்த்திராஜா நகர் தென்றல்வீதி ஆகியவை கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்படுகிறது. இந்த பகுதியில் பொதுபோக்குவரத்து, பொதுமக்கள் நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்படுகிறது.

இந்த தகவலை மாவட்ட கலெக்டர் அருண் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News