செய்திகள்
அன்பழகன் எம்.எல்.ஏ.

அரசு ஊழியர் சம்பளத்தை பிடித்தம் செய்தால் போராட்டம்- அ.தி.மு.க. அறிவிப்பு

Published On 2020-05-19 11:51 GMT   |   Update On 2020-05-19 11:51 GMT
அரசு ஊழியர்கள் சம்பளத்தை பிடித்தம் செய்தால் அ.தி.மு.க. சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று அன்பழகன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

புதுச்சேரி:

புதுவை அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

புதுவை மாநில வருவாயை பெறுக்குவதற்கு கலால்துறை, போக்குவரத்து கேபிள் டி.வி. துறைமுக அபிவிருத்தி திட்டம் போன்ற பல வி‌ஷயங்களில் அரசு கவனம் செலுத்த வேண்டும். குறிப்பிட்ட ஒரு சிலர் வருமானம் ஈட்ட மாநில ஒட்டுமொத்த வருவாயை இழக்க கூடாது.

ஆனால், ஆட்சியாளர்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சியினர் செய்ய கூடிய மதுபான தொழிலில் நஷ்டம் ஏற்பட கூடாது என்பதற்காக மதுபான கொள்கை வி‌ஷயத்தில் தொடர்ந்து தடுமாற்றத்துடன் முதல்- அமைச்சர் இருந்து வருகிறார்.

மதுபான விலை ஏற்றம் என்பது மது பிரியர்கள் தலையில் தான் வைக்கப்படும். நியாய மாக கார்ப்பரே‌ஷன் அமைத்து மொத்த மது பான விற்பனையை அரசு செய்தாலோ, சில்லரை கடைகளை ஏலம் விட்டாலோ அரசுக்கு ரூ. ஆயிரம் கோடிக்கு மேலான வருமானம் கிடைக்கும்.

அதை விடுத்து, அரசு ஊழியர்கள் பல்வேறு தியாகத்திற்கு தங்களை உட்படுத்தி கொள்ள வேண்டும் என நாராயணசாமி கூறுவது ஏற்புடையது அல்ல. வருவாயை பெருக்க தெள்ளத்தெளிவாக வழிமுறைகள் இருந்தும் அதை செய்யாமல் அரசு ஊழியர்கள் தலையில் கையை வைப்பது முதல்-அமைச்சருக்கு அழகல்ல.

அரசு ஊழியர்கள் சம்பளத்தை பிடித்தம் செய்வதை எதிர்த்து அ.தி.மு.க. மாபெரும் போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கிறோம்.

மின்துறை தனியார் மயமானால் மின்சார விலை உயரும். தனியார் மயமாக்குதல் சம்பந்தமான அறிவிப்பில் காங்கிரஸ் அரசின் முடிவு என்ன என்பதனை தெரிவிக்க வேண்டும்.

முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு எனக்கு தெரிந்து ரூ.10 கோடிக்கு மேல் வசூலாகியுள்ளது. இதனை என்ன செய்ய போகிறார்கள். ஏழை மக்களுக்காக இந்த பணத்தை இதுவரை பயன்படுத்தவில்லை.

அந்த பணத்தில் முதல்-அமைச்சர் தனக்கு தேவையான குறிப்பிட்ட துறைக்கு மட்டும் செலவு செய்வது கண்டிக்கதக்கது.முதல்-அமைச்சர் நிவாரண நிதியில் மஞ்சள் கார்டுக்கு அரிசி, துவரம் பருப்பு கொடுக்கலாம்.

இவ்வாறு அன்பழகன் கூறினார்.

Tags:    

Similar News