செய்திகள்
விபத்து பலி

புதுவை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தடுமாறி விழுந்த விவசாயி பலி

Published On 2020-03-17 15:51 IST   |   Update On 2020-03-17 15:51:00 IST
புதுவை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தடுமாறி விழுந்த விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி:

புதுவை அருகே வானூரை அடுத்த ரங்கநாதபுரம் பூந்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் செங்கேணி (வயது 62). விவசாயி.

இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் ரங்கநாதபுரத்தில் இருந்து லிங்காரெட்டிபாளையம் நோக்கி சென்றார். லிங்கா ரெட்டிப்பாளையம் சுடுகாடு அருகே வேகத்தடை இருந்ததால் செங்கேணி திடீர் பிரேக் போட்டார்.

இதில், மோட்டார் சைக்கிளில் இருந்து தடுமாறி விழுந்த செங்கேணி தலையில் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அந்த வழியாக சென்றவர்கள் செங்கேணியை மீட்டு வானூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த செங்கேணி சிகிச்சை பலன் இன்றி இன்று அதிகாலை பரிதாபமாக இறந்து போனார்.

இதுகுறித்து அவரது மகன் கந்தன் கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போக்கு வரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News