செய்திகள்
கொரோனா வைரஸ் எதிரொலி - காரைக்காலில் 5-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை
கொரோனா வைரஸ் எதிரோலியாக காரைக்காலில் எல்.கே.ஜி. முதல் 5-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது.
காரைக்கால்:
சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் இன்று உலக மக்களை அச்சுறுத்தி உள்ளது. தற்போது இந்த வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருவதால் மத்திய அரசு நோய் தடுப்பு நடவடிக்கை எடுத்து உள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் சுகாதாரத்துறை உஷார்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த வைரஸ் பரவாமல் இருக்க தமிழகத்தில் எல்.கே.ஜி. முதல் 5-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. இதே போல புதுவை மாநிலம் காரைக்காலிலும் 5-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காரைக்காலில் கொரோனா வைரஸ் தொற்றுநோயிலிருந்து சிறு குழந்தைகளை காக்கும் பொருட்டு, மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், எல்.கே.ஜி முதல் 5-ம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
காரைக்கால் மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:-
கொரோனா வைரஸ் தொற்றுநோயிலிருந்து, பள்ளி கல்லூரி மாணவர்களை காக்கும் பொருட்டு, அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளிலும் வருகிற 31-ந் தேதி வரை பிரார்த்தனை, அணி வகுப்பு, கூட்டம், ஒன்றும் கூடும் நிகழ்ச்சி, விழாக்கள் போன்ற எதுவும் நடத்த கூடாது.