மகாசக்தி பூலோக நாயகி அம்மன் கோவிலில் திருக்கல்யாண விழா 24-ந் தேதி நடக்கிறது
- 25-ந்தேதி அக்னிசட்டி எடுத்து ஆடுதல் நடக்கிறது.
- 27-ந்தேதி மறுபூஜையுடனும் விழா நிறைவு பெறுகிறது.
கோவை ராமநாதபுரம் பூசாரி மாரியப்பன் வீதியில் ஸ்ரீமகா சக்தி பூலோகநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 17-வது ஆண்டு திருக்கல்யாண திருவிழா நேற்று காலை மகா கணபதி ஹோமம், கொடியேற்றுதலுடன் தொடங்கியது. இன்று (வியாழக்கிழமை) முதல் வருகிற 23-ந் தேதி வரை தினமும் அபிஷேக பூஜை, அலங்கார பூஜை, அம்மன் திருவீதி உலா, அக்னி சட்டி எடுத்து வருதல் நடக்கிறது.
24-ந் தேதி காலை 9 மணிக்கு சீர் எடுத்து வருதல், ஸ்ரீபூலோக நாயகீஸ்வரன், ஸ்ரீமகா சக்தி பூலோக நாயகி அழைத்து வருதல், 6.30 மணிக்கு மேல் 8 மணிக்குள் திருக்கல்யாண விழா நடைக்கிறது. இரவு 8.30 மணிக்கு அன்னதானம் நடக்கிறது.
25-ந் தேதி காலை 10.30 மணிக்கு சக்திகரகம், பூவோடு, பால்குடம், அலகுத்தி வருதல், நண்பகல் 12.30 மணிக்கு அக்னிசட்டி எடுத்து ஆடுதல், 1.30 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு மாவிளக்கு அலங்கார பூஜை, மாலை 6.30 மணிக்கு நாட்டிய நிகழ்ச்சி, 26-ந் தேதி காலை 11 மணிக்கு அபிஷேக பூஜை, நண்பகல் 12 மணிக்கு மஞ்சள் நீர், சுவாமி திருவீதி உலா நடக்கிறது. 27-ந் தேதி காலை 11 மணிக்கு அபிஷேக பூஜை, மறுபூஜையுடனும் விழா நிறைவு பெறுகிறது.