தோஷ பரிகாரங்கள்

பூர்வீகச் சொத்தில் பிரச்சனை ஏற்பட ஜோதிட ரீதியாக இவை தான் காரணம்

Update: 2022-06-24 07:04 GMT
  • முறையற்ற பாகப்பிரிவினை போன்ற சொத்து தொடர்பான ஆவணங்களால் தீராத, தீர்க்க முடியாத மன உளைச்சல் இருக்கும்.
  • ஜோதிடத்தில் இளைய சகோதர, சகோதரியால் பற்றிக் கூறும் மூன்றாமிடமே ஆவணங்களைப் பற்றியும் கூறுகிறது.

மனிதர்களின் நிகழ் கால மற்றும் எதிர்கால தேவைக்கான அனைத்து தகவல்களுக்கும் எழுத்துப் பூர்வமான ஆதாரமே ஆவணங்கள். ஜோதிட ரீதியாக ஒருவரின் ஆவணங்களைப் பற்றிக் கூறுமிடம் லக்னத்திற்கு மூன்றாமிடம் என்றாலும் ஆவணங்களுக்கான காரக கிரகம் கால புருஷ மூன்றாம் அதிபதியான புதன் பகவான்.

மூன்றாம் அதிபதி மற்றும் மூன்றில் நின்ற கிரகங்களின் வலிமையை பொறுத்தே ஒருவருக்கு ஆவணங்கள் தொடர்பான சாதக பாதகங்கள் நிகழ்கின்றன.

ஒருவருக்கு ஆவணங்கள் தொடர்பான அனைத்தும் சுப பலனாக நடைபெற புதனும் மூன்றாமிடமும் வலிமை பெற வேண்டும்.

மூன்றாமிடமும் புதனும் வலிமை குறைந்து ராகு/கேதுக்களின் சம்பந்தம் பெறும் போது ஆவணங்களால் ஏற்படும் அசுப பலன்கள், மன உளைச்சலை சற்று மிகைப்படுத்தலாகவே தருகிறது. ஜாதகத்தில் புதனுக்கு ராகு/கேது சம்பந்தம் இருப்பவர்களுக்கு பூர்வீகச் சொத்தின் மூலம் கையெழுத்து மாற்றம் ,சர்வே எண் திருத்தம், எல்லைத் தகராறு, முறையற்ற பாகப்பிரிவினை போன்ற சொத்து தொடர்பான ஆவணங்களால் தீராத, தீர்க்க முடியாத மன உளைச்சல் இருக்கும்.

ஜோதிடத்தில் இளைய சகோதர, சகோதரியால் பற்றிக் கூறும் மூன்றாமிடமே ஆவணங்களைப் பற்றியும் கூறுகிறது. மூன்றாம் பாவகக்காரர் செவ்வாய். செவ்வாய் என்றால் சொத்து, சகோதரம்.நமது ஜோதிட முன்னோடிகள் தீர்க்க தரிசிகள். மூன்றாமிடத்தால் ஒருவருக்கு அசவுகரியம் என்றால் சகோதரத்தாலும், ஆவணத்தாலும், சொத்தாலும் மட்டுமே வரும் என்று எவ்வாறு ஆனித்தரமாக வரையறுத்துள்ளார்கள். ஆக மூன்றாமிடம் வலுவிலந்தவர்களுக்கு சகோதரத்தால் ஆவணத்தால் சகாயமற்ற பலன் ஏற்படுகிறது.

எத்தனையே குடும்பங்களில் பூர்வீகச் சொத்தை பிரிக்கும் போது சகோதரர்களுக்குள் கருத்து வேறுபாட்டால் சொத்துடன் சகோதர, சகோதரிகளும் பிரிவதை அனுபவத்தில் பார்க்கிறோம். இவர்களுக்கு மூன்றாமிடம் பலவீனமாக இருப்பதுடன் புதனுக்கு ராகு, கேதுக்களின் சம்பந்தமும் இருக்கும். ஜனன கால ஜாதகத்தில் நான்காமிடம், நான்காம் அதிபதி, செவ்வாய் வலிமை பெற்று இருந்தாலும் புதன்,ராகு/கேது சம்பந்தம் இருந்தால் சொத்துக்களால் பயனடைய முடியாத வகையில் ஆவணங்கள் தொடர்பான பிரச்சினை தலை விரித்து ஆடும்.

இது ஒருபுறம் இருக்க கூட்டுக் குடும்பத்தில் இருக்கும் சிலர் மூன்றாமிடத்தால் தமக்கு ஏற்படப் போகும் அசவுகரியத்தை உணராமல் உடன் பிறந்தவர்கள் பெயரில் சொத்து வாங்கி குவித்து விட்டு பின் நாட்களில் மன உளைச்சலை சந்திக்கிறார்கள். மூன்றாமிடம் பலவீனத்துடன் புதன் + சனி +ராகு சம்பந்தம் இருப்பவர்களுக்கு இந்த பிரச்சினை வாழ்வாதாரத்தையே அசைக்கும் விதமாகவே இருக்கிறது.

சுய ஜாதகத்தில் செவ்வாய்க்கு ராகு/ கேது சம்பந்தம் இருப்பவர்களுக்கு வில்லங்கமான சொத்தால் பண முடக்கம் ஏற்படும். அல்லது மூலப் பத்திரம், ஈசி இவற்றின் மூலம்வேறு யாராவது சொத்தின் மேல் உரிமை கொண்டாடுவார்கள்.

அதாவது முறையான ஆவணங்கள் இல்லாத ஒரு சொத்திற்கு பலர் உரிமை கொண்டாடுவது அல்லது சம்பந்தம் இல்லாத சொத்தை போலிப் பத்திரங்கள் தயாரித்து விற்பவர்களிடம் சொத்து வாங்கி ஏமாறுவது அல்லது புறம் போக்கு நிலங்களை பட்டா போட்டு விற்பவர்களிடம் நிலம் வாங்கி ஏமாறுவார்கள். அரசின் சட்ட திட்டங்களால் போலி பத்திர சொத்து விற்பனை தற்போது குறைந்துள்ளது. என்றாலும் இன்றும் பல போலி பத்திர வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதே போல் ஜாதகத்தில் சூரியன் + ராகு சம்பந்தம் இருப்பவர்களின் சொத்து கோவில், சர்ச், மசூதி போன்றவற்றின் அருகில் இருக்கும்.

அதனால் சொத்து தொடர்பான வழக்கு, தொடர் சட்ட சிக்கல் இருந்து கொண்டே இருக்கும். சொத்தால், முறையான ஆவணம் இன்மையால் அவதிப்படுபவர்கள் சனிக்கிழமை காலை 6 மணி முதல் 7 மணி வரையான சனி ஒரையில் 21 பேருக்கு இட்லியுடன் எள் சட்னி தண்ணீருடன் தானம் தரவும். (48 வாரம்) அல்லது செவ்வாய் காலை 6 மணி முதல் 7 மணி வரையான செவ்வாய் ஓரையில் வீரபத்திரருக்கு வெற்றிலை மாலை அணிவித்து (27 எண்ணம்) 9 நல்லெண்ணெய் தீபம் ஏற்றி 48 வாரம் வழிபடவும்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Tags:    

Similar News