தோஷ பரிகாரங்கள்

ஒரே குடும்பத்தில் சிலரை மட்டும் பித்ரு தோஷம் தாக்குமா?

Update: 2023-05-17 07:57 GMT
  • தொடரும் கடன் பிரச்சினைக்கு முன்னோர் வழிபாடே சிறந்த பரிகாரமாகும்.
  • பாதிப்பு என்பது ஏதாவது ஒரு கால கட்டத்தில் வெளிப்பட்டே தீரும்.

பித்ரு தோஷம் உள்ளவர்களுக்கு திருமணம், குழந்தை பாக்கியம் வீடு, வாகன யோகம் போன்ற சுப பலன்கள் எளிதில் நடக்காது. ஒரு சிலருக்கு கடுமையான உடல் உபாதைகள், மனநோய் காரணமாக தாம்பத்திய வாழ்க்கை பாதிக்கும். சிலருக்கு பலமுறை திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு. தொடரும் கடன் பிரச்சினைக்கு முன்னோர் வழிபாடே சிறந்த பரிகாரமாகும்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிலருக்கு மட்டும் இந்த தோஷம் ஏற்படும் என்பது தவறான கருத்து. ஒரு தாய், தந்தைக்கு பிறந்த 4 ஆண்கள் இருந்தால் ஒன்று அல்லது இரண்டு பேருக்கு மட்டும் பித்ரு தோஷ தாக்கம் அதிகமாக இருக்கும். முன்னோர்களின் மரபணு சம்பந்தம் ஒருவரின் உடலில் எந்த அளவு இருக்கிறதோ அதற்கு ஏற்றாற் போல் பித்ரு தோஷ தாக்கத்தின் வலிமையில் மாற்றம் ஏற்படும்.

ஆனால் பாதிப்பு என்பது ஏதாவது ஒரு கால கட்டத்தில் வெளிப்பட்டே தீரும். நம் அண்ணன் கஷ்டப்படுகிறான், தம்பி கஷ்டப்படுகிறான். நாம் நிறைய புண்ணியம் பண்ணி இருக்கிறோம். அதனால் நன்றாக இருக்கிறோம் என்று யாரும் நினைத்து விட முடியாது. அந்த பிறவிக்குள் ஏதாவது ஒரு கால கட்டத்திற்குள் நிச்சயம் பாதிப்பு உண்டு. அவர் பாதிக்கப்படவில்லை என்றால் அவரின் வாரிசுகள் பல மடங்காக பாதிக்கப்படுகிறார்கள்.

வசதிகள் கொட்டி கிடக்கும். ஆனால் அதை அனுபவிக்க பாக்கியமற்ற வாரிசுகள் உருவாகும். கொடுத்து கெடுக்கும் யோகம். இதுவும் ஒரு வகையான பித்ரு தோஷம். நமக்கு தான் பாதிப்பு ஏற்படுகிறது என்று யாரும் வருந்த வேண்டாம். ஒரே தாயின் வயிற்றில் உருவாகிய வாரிசுகளுக்கு பாதிப்பு ஏற்படும். காலம் மட்டும் மாறுபடும்.

ஒரு மனிதன் தந்தை வழி மூதாதையர் 6 பேர்,தாய் வழி மூதாதையர் 6 பேர் என மொத்தம் 12 பேருக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும்.

முறையான பித்ரு பூஜை ஜாதகத்தில் உள்ள எல்லா தோஷங்களையும் நிச்சயம் அகற்றி விடும். ஜாதகத்தையும், நவகிரகத்தையும் நம்பி பலவித வழிபாடுகளை பரிகாரங்களை செய்பவர்கள், தான் செய்ய வேண்டிய பித்ரு கடமையில் அவ்வளவாக ஈடுபாடு காட்டாமல் தொடர் கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள். எனவே, மகாளய பட்சம் அன்று பித்ரு தர்ப்பணம் செய்து வழிபாடு செய்தால் புண்ணிய பலன் தலைமுறைக்கு வந்து சேரும்.

Tags:    

Similar News