தோஷ பரிகாரங்கள்

கல்விச்செல்வமும், கைநிறையப் பொருள் வரவும் கிடைக்க....

Update: 2023-03-27 05:13 GMT
  • இறைவன் தடுப்பதை யாராலும் கொடுக்க முடியாது
  • இறைவன் கொடுப்பதை எவராலும் தடுக்க முடியாது

பூஜையறையில் விநாயகர் படம், சிவ குடும்ப படம், பெருமாள்-லட்சுமி படங்கள் வைத்து, அருகில் குத்துவிளக்கில் ஐந்து முகத்திலும் தீபம் ஏற்ற வேண்டும். நடுநாயகமாக விநாயகர், சரஸ்வதி, லட்சுமி படம் வைக்க வேண்டும். காலையிலும், மாலையிலும் விளக்கேற்றி மங்கலப் பாடல்கள் பாடி வழிபட வேண்டும்.

வீட்டு முற்றத்தில் துளசி மாடம் வைத்து துளசி மாதாவைக் கும்பிட வேண்டும்.

எதிர்மறை சொற்களைத் தவிர்த்து இனிமையான சொற்களையே பேச வேண்டும்.

வேண்டாம், போ, இல்லை என்ற எதிர்மறைச் சொற்களையும், விலங்குகளின் பெயர்களைச் சொல்லி அதட்டும் முறையையும் கைவிட வேண்டும்.

முன்னோர்களின் நினைவு நாட்களில் அவர்களை நினைத்து அவர்களுக்குப் பிடித்த உணவுகளை படைத்து வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

பிரார்த்தனைகள் மூலம் இறைவன் நம் இல்லம் தேடி வந்து அருள் கொடுக்கவும், மகிழ்ச்சியோடு நாம் வாழவும் இங்ஙனம் செய்வது நல்லது.

இறைவன் தடுப்பதை யாராலும் கொடுக்க முடியாது, இறைவன் கொடுப்பதை எவராலும் தடுக்க முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Similar News