இன்று தூர்வாஷ்டமி... அருகம்புல்லை வழிபட்டால் தீரும் பிரச்சனைகள்..
- இன்று தூர்வா என்னும் அருகம்புல்லை பூஜை செய்ய வேண்டும்.
- அருகம்புல்லுக்கு சந்தனம், குங்குமம் இட்டு வணங்க வேண்டும்.
ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை அஷ்டமி தூர்வாஷ்டமி எனப்படும். இன்று தூர்வா என்னும் அருகம்புல்லை பூஜை செய்ய வேண்டும். அதாவது சுத்தமான இடத்தில் அருகம்புல் வளர்ந்திருக்கும் இடத்திற்குச் சென்றோ, அல்லது அருகம்புல்லை ஒரு தாம்பாளத்தில் வைத்தோ, அதற்கு (அருகம்புல்லுக்கு) சந்தனம், குங்குமம் இட்டு வணங்கி பிரார்த்திக்க வேண்டும்.
அப்போது, "அருகம்புல்லே!, நீ அம்ருதத்திலிருந்து உண்டானாய், தேவர்களாலும் அசுரர்களாலும் வணங்கப்படுகிறாய்.
எங்களுக்கு சவுபாக்யத்தையும், குழந்தைச் செல்வத்தையும் தந்து அனைத்து காரியங்களையும் வெற்றியடையச் செய். எவ்வாறு நீ கிளை, உபகிளை என பரந்து விரித்து பூமி முழுவதும் பரவுகின்றாயோ, அவ்வாறே எனது வம்சத்தையும் மகன், மகள், பேரன், பேத்தி, அவர்களுக்கு குழந்தை என விரிவடையச் செய்வாயாக" என்று சொல்லி அருகம்புல்லை வணங்க வேண்டும்.
இதனால் அனைத்து பலன்களும் நிச்சயம் கிட்டும்.