தோஷ பரிகாரங்கள்

நிம்மதியான தூக்கத்திற்கு வாஸ்து படி படுக்கை அறை அமைப்பது எப்படி?

Update: 2022-08-06 05:51 GMT
  • நிம்மதியான உறக்கத்தை பெற வாஸ்து படி படுக்கை அறை அமைக்க வேண்டும்.
  • மேற்கு திசையில் தலை வைத்து உறங்கினால் நல்ல உறக்கம் கிடைக்கும்.

உடல் நன்றாக இயங்க நம்க்கு 6 மணி நேர உறக்கம் தேவை. நடு இரவு 12 மணிக்கு முன் 3 மணி நேரம், பின் 3 மணி நேரம் தான் அந்த 6 மணி நேர உறக்கம். ஒரு நாளில் விரையமாகும் நம் உடல், மன ஆற்றலை மீட்க இந்த 6 மணி நேர உறக்கம் மட்டுமே உதவும். மற்ற 6 மணி நேர உறக்கம் உதவாது. அது எவ்வாறு என்று பார்ப்போம்.

நடு இரவு 12 மணிக்கு முன் 3 மணி நேர உறக்கம் அன்றைய நாளில் விரயமான ஆற்றலை மீட்க்கிறது;பின் 3 மணி நேர உறக்கம் அடுத்த நாளுக்குத் தேவையான ஆற்றலை உருவாக்குகிறது. இப்படி உறங்கினால் உடல் உறுப்புகளும், மனமும் புத்துணர்வு பெருகிறது. தூங்கி எழுந்ததும் தலைவலி வராது. ஒவ்வொரு நாளும் பல் கசப்பான அனுபவங்களை மனம் எதிர் கொள்கிறது. அம் மனதை உற்சாகமாக வைத்துக் கொள்வது நம் கடமை இல்லையா? மனம் நன்றாக இயங்க வேண்டுமானால் நல்ல உறக்கம் வேண்டும். அத்தகைய உறக்கத்தை நாம் பெற வேண்டுமானால் வாஸ்து படி படுக்கை அறை அமைக்க வேண்டும். அது எவ்வாறு என்று பார்ப்போம்.

வாஸ்து படி படுக்கை அறையை தென்மேற்கு கன்னி மூலையில் அமைக்க வேண்டும். வடகிழக்கு வழியாக நல்ல அதிர்வு அலைகள் வீட்டிற்குள் நிழையும்; அந்த அதிர்வலைகள் தென்மேற்கில் மின்காந்த சக்தியாக மாறி வீட்டில் உள்ளவர்களுக்கு உயிர் ஆற்றலை (ஜீவ சக்தி) கொடுக்கும். எனவே படுக்கை அறையை தென்மேற்கு முலையில் அமைக்க வேண்டும்.தெற்கு மற்றும் மேற்கு திசையில் தலை வைத்து உறங்கினால் நல்ல உறக்கம் கிடைக்கும்.

கன்னி மூலையில் பழைய துணிகள் வைப்பதை தவிர்க்கவும், காரணம் அவை தீய ஆற்றலை உருவாக்கும்.நல்ல உறக்கம் அமையாது. தூங்கி எழுந்ததும் புத்துணர்வு இருக்காது. இவற்றை தவிர்க்க கன்னி மூலை தூய்மையாக இருப்பது அவசியம். படுக்கை அறை காற்றோட்டமாக இருக்க வேண்டும். பொழுது போக்கு கருவிகளை கிழக்கு-வடக்கு பகுதில் வைக்க வேண்டும். இந்த போட்டிகள் நிறைந்த உலகில் நீங்கள் வெற்றி பெற உற்சாகமான உடலும் மனமும் வேண்டும். அதை உறக்கம் தான் தரும். உறங்கும் இடமான படுக்கை அறையை வாஸ்து படி அமைத்து வாழ்வில் வெற்றி பெறுங்கள்..!!!

Tags:    

Similar News